Real Hero Fight for Life: தீ விபத்தில் பெற்றோரை பத்திரமாக மீட்டு உயிருக்கு போராடும் ஹெவிவெயிட் சாம்பியன்; பாராட்டுடன் பிரார்த்தனை செய்யும் நெஞ்சங்கள்.!

பெற்றோரின் உயிரை பாதுகாத்த மகன், இறுதியில் நாயின் உயிரை காப்பாற்ற எண்ணி உயிருக்கு போராடும் சோகம் அமெரிக்காவில் நடந்து இருக்கிறது.

Real Hero Fight for Life: தீ விபத்தில் பெற்றோரை பத்திரமாக மீட்டு உயிருக்கு போராடும் ஹெவிவெயிட் சாம்பியன்; பாராட்டுடன் பிரார்த்தனை செய்யும் நெஞ்சங்கள்.!
Former UFC Champion Mark Fight with Life (Photo Credit: @Dexerto X)

மார்ச் 14, ஓஹியோ (World News): அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணம், கொலம்பஸ் நகரை சேர்ந்தவர் மார்க் கோல்மன் (Mark Coleman). இவர் முன்னாள் யு.எப்.சி ஹெவிவெய்ட் சாம்பியன் ஆவார். மார்க் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன், தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறார். இவர்களின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களின் வீட்டில் தீயைபற்றிக்கொள்ள, மார்க் கோல்மனின் மகள்கள் வெளியே சென்றுள்ளனர். வீட்டில் இருந்த மார்க் தனது பெற்றோரை ஒவ்வொருவராக காப்பாற்றி இருக்கிறார். இதற்குள் வீட்டிற்குள் தீ மளமளவென பற்றி எரிய, வீட்டில் சிக்கிய நாய் வெளியே வர இயலாமல் தவித்துள்ளது. Ranji Trophy 2024 MUM Victory: ரஞ்சி கோப்பை 2024ல் மும்பை அணி அபார வெற்றி; 169 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை தட்டிச்சென்றது..! 

வளர்ப்பு நாயை காப்பாற்ற எண்ணி சோகம்: இதனையடுத்து, நாயை காப்பாற்ற முயற்சித்த மார்க் வீட்டிற்குள் செல்ல, அவர் பலத்த தீக்காயத்தினால் பாதிக்கப்பட்டார். நாயை பத்திரமாக அவர் மீட்டு கொண்டுவந்தபோதும், நாய் பரிதாபமாக உயிரிழந்தது. கரும்புகையை சுவாசித்து உட்பட தீ காயத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மார்க், அங்கேயே மயங்கி விழுந்தார். முன்னதாகவே தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்ட காரணத்தால், மீட்பு படையினரும் விரைந்து வந்து மார்க்கை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குத்துசண்டை வீரரான மார்க், அவரின் பெற்றோரரை காப்பாற்றி உயிருக்கு போராடி வருகிறார்.

(The above story first appeared on LatestLY on Mar 14, 2024 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).