Ranji Trophy 2024 Final | Mumbai Team Victory (Photo Credit: @BCCIDomestic X)

மார்ச் 14, மும்பை (Sports News): இந்திய அளவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில், உயரிய அளவில் கவனிக்கப்படுவது ரஞ்சி கோப்பை (Ranji Trophy 2024) போட்டித்தொடர். 38 அணிகள் கலந்துகொண்டு விளையாடிய ரஞ்சி கோப்பை தொடரில், பல்வேறு பிரிவுகளில் அணிகள் திறம்பட வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும். நடப்பு ஆண்டு ரஞ்சி தொடரில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகின. கடந்த மார்ச் 10ம் தேதி தொடங்கி நடைபெற்ற ஆட்டத்தில், மும்பை மற்றும் விதர்பா அணிகள் இரண்டு இன்னிங்சில் திறம்பட விளையாடி இன்று வெற்றியை அடைந்து இருக்கிறது. 42 வது முறையாக மும்பை அணி ராஞ்சி கோப்பையில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது. இப்போட்டித்தொடர் மும்பையில் உள்ள வான்கடே விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. Ragi Puttu Recipe: 2 நிமிடத்தில் ராகி புட்டு.. இப்படி செஞ்சு பாருங்க, கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..! 

அசத்தல் வெற்றி பெற்ற மும்பை: போட்டியில் மும்பை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ஷரதுல் அதிகபட்சமாக 69 பந்துகளில் 75 ரன்கள் அடித்திருந்தார். பிரித்வி ஷா 63 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தார். இரண்டாவது இன்னிங்சில் முஷீர் கான் 326 பந்துகளில் 136 ரன்கள் அடித்திருந்தார். ஷ்ரேயாஸ் 111 பந்துகளில் 96 ரன்கள் அடித்திருந்தார். விதர்பா அணியின் சார்பில் வாட்கார் 199 பந்துகளில் 102 ரன்களும், கருண் நாயர் 220 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார். இறுதி போட்டியில் மும்பை அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 224 & 418 ரன்கள் எடுத்திருந்தது. விதர்பா அணி சார்பில் 105 & 368 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.