
மே 26, ஹனோய் (World News): தெற்காசிய நாடுகளுக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) அரசுமுறை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். பல நாட்டின் அதிபர்களுடன் நேரடியாக சந்தித்து உயர்மட்ட ஆலோசனையும் நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தின் அங்கமாக இன்று அவர் வியட்நாம் நாட்டுக்கு சென்றிருந்தார். அங்கு அதிபரின் விமானம் தரையிறங்கியதும் அரசு சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. Health Tips: முதலுக்கே மோசம்.. கோடை வெப்பத்தால் ஆண்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை.!
அதிபருக்கு பளார் விட்ட மனைவி (Emmanuel Macron Allegedly Slapped):
இந்நிலையில், வியட்நாம் மண்ணில் தரையிறங்கியதும் அதிபருக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, அதிபர் இமானுவேல் மேக்ரானை, அவரின் மனைவி மற்றும் பிரான்ஸ் நாட்டின் முதல் பெண்மணியுமான பிரிஜிட் மேக்ரான் (Brigitte Macron) கணவரை அடித்தார். இந்த வீடியோ காட்சிகள் எதற்ச்சையாக படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டு மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. இருவருக்கும் இடையே என்ன வாக்குவாதம் நடந்தது? என தெரியவில்லை. அதேபோல, கதவு திறக்கப்பட்டது உணர்ந்து மேக்ரான் நிலைமையை சமாளித்தாலும், அவரின் மனைவி கணவரின் கைகளை பிடிக்கால் நடந்து வந்தார். இது பேசுபொருளாகியுள்ளது.
பிரான்ஸ் அதிபரை மனைவி அறைந்ததாக கூறப்படும் வீடியோ:
NEW - Emmanuel and Brigitte Macron arrive in Vietnam. pic.twitter.com/HGGFJ1Bw64
— Wallstreet Queen (@wsq0fficial) May 26, 2025