Summer Heat / Sperm (Photo Credit : Pixabay)

மே 26, சென்னை (Health Tips): ஒவ்வொரு கோடை காலமும் வெப்பம் மற்றும் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மனித உயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலர் மரணமும் அடைகின்றனர். வெப்பமான சூழல் ஆண்களின் கருவுறுதலை பாதிக்கும் முக்கிய காரணியாக இருப்பதாக கூறப்படுகிறது. வெப்பம் மற்றும் அதீத குளிர் போன்றவை கணிசமாக விந்தணுக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. Nannari Ver: நன்னாரி வேரில் மறைந்து கிடைக்கும் மருத்துவ பலன்கள்.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

கோடை காலத்தில் கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வது அவசியம் :

பொதுவாக மக்கள் குளிர்காலத்தில் கருவுறுதல் சிகிச்சையை மேற்கொள்கின்றனர். கோடை காலத்தில் கருவுறுதல் சிகிச்சைக்காக யோசிப்போம். ஆனால் குளிர்காலத்தை விட கோடை காலத்தில் தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். உயிரணுக்கள் செழிப்புடன் இருக்க, உடலின் வெப்பத்தை விட உயிரணுவின் வெப்பம் 2 - 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்க வேண்டும். வெப்பம், இறுக்கமான ஆடைகள், அதிக வெப்பநிலையுள்ள பணியிடங்கள் போன்றவை அதன் தரத்தை பாதிக்கும்.

உயிரணு தரத்தை மேம்படுத்த டிப்ஸ் :

கோடையில் அதிக வெப்பம் இருக்கும்போது கருவுறுதல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. வெப்ப அழுத்தம் உயிரணுக்களின் இயக்க சதவீதத்தை குறைத்து விடும். உடலை குளிர்ச்சியாக வைக்க அந்த காலநிலைக்கேற்ப உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும். வெயிலுக்கு தேவையான அளவு நீரை குடிப்பதும் நல்லது. வெள்ளரி, ஆரஞ்சு உள்ளிட்ட குளிர்ச்சி தரும் பழம் போன்றவற்றையும் சாப்பிடலாம். கோடையில் அதிகாலை நேரத்தில் வாக்கிங், ஜாக்கிங் போன்றவை செய்யலாம். இதனால் ஹார்மோன்கள் கட்டுப்படும். உடலும் நலம் பெறும்.