US Shocker: 14 வயது சிறுவர்களை தனது வலையில் வீழ்த்தி, உல்லாசம் அனுபவித்த ஆசிரியை: அமெரிக்காவில் பகீர் சம்பவம்.!
அமெரிக்காவில் தொடர்ந்து பள்ளி ஆசிரியைகள் மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவில் இருந்ததாக புகார் எழுந்து பலர் கைது செய்யப்பட்டு வரும் சம்பவம் நடந்துள்ளது.
நவம்பர் 23, நியூ ஜெர்சி (World News): அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 38 வயதுடைய ஆசிரியை லிடியா பின்டோ (Lydia Pinto). இவர் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரிட்ஜ்வாட்டர் - ரரிதன் (Bridgewater-Raritan High School) உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார்.
சமீபத்தில், அவரின் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்த நிலையில், விசாரணையில் மாணவராக பயின்று வந்தவருடன் ஆசிரியை நீண்ட ஆண்டுகளாக பாலியல் ரீதியான உறவு வைத்திருந்தது அம்பலமானது.
14 வயதுடைய பள்ளி மாணவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியை, நான்கு ஆண்டுகளை கடந்து பாலியல் ரீதியாக மாணவரை பயன்படுத்தி இருக்கிறார். பள்ளி மாணவரின் வகுப்புகள் நிறைவுபெற்றபோதிலும், அவர் பாலியல் உறவை தொடர்ந்துள்ளார். Delhi Horrific Murder: 60 முறை கத்தியால் வெட்டி, பணம் தரமறுத்த நண்பனை கூறுபோட்ட பயங்கரம்: கொலை செய்தவாறு நடனம்.. ஈரக்குலை நடுங்கும் சம்பவத்தின் வீடியோ உள்ளே.!
ஹாக்கி விளையாட்டுக்கும் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு இருந்த ஆசிரியை, அதனை பயன்படுத்தி 14 வயது மாணவருடன் உறவில் இருந்திருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த Bridgewater நகர காவல் துறை அதிகாரிகள், ஆசிரியரின் செயலை அவரின் மெயில் சேட் வைத்து ருத்தி செய்துள்ளனர்.
இதனையடுத்து, அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் பயின்ற முன்னாள் மாணவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. பள்ளி ஆசிரியையிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜிம் பயிற்சியாளராக நெருங்கி பழகியவர், பின்னாளில் 14 முதல் 15 வயது மாணவர்களை தனது வலையில் வீழ்த்தி பாலியல் ரீதியாகவும் பயன்படுத்தியது தெரியவந்தது.
(The above story first appeared on LatestLY on Nov 23, 2023 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

