Hashim Musa: பாகிஸ்தான் ராணுவத்தில் பணி.. பஹல்கம் தாக்குதல் பயங்கரவாதி குறித்து அதிர்ச்சி தகவல்.!

பாகிஸ்தானிய இராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையில் பணியாற்றிய நபர், இன்று பயங்கரவாதியாக இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது வெளிச்சமாகி இருக்கிறது.

Hashim Musa: பாகிஸ்தான் ராணுவத்தில் பணி.. பஹல்கம் தாக்குதல் பயங்கரவாதி குறித்து அதிர்ச்சி தகவல்.!
Pahalgam Terror Attack (Photo Credit: @OsintTV X)

ஏப்ரல் 29, புதுடெல்லி (New Delhi): ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்கம் பள்ளத்தாக்கு பகுதியில், இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்பட்ட சுற்றுலா ரிசார்ட்டில் பயங்கர தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். உளவுத்துறை அதிகாரி, ராணுவ ஜெனரல், கடற்படை கமாண்டர், பொதுமக்கள் என கண்ணில் படும் ஆண்களை பயங்கரவாத கும்பல் தேடித்தேடி வேட்டையாடி இருந்தது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் அரசு & ராணுவத்துக்கு தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டு வைத்திருந்தது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் உறவுகள் முறிந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இந்த விஷயத்துக்கு பதில் நவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை தாண்டிய துப்பாக்கிசூடு நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்து எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதிகாரத்திமிர்? ஏ.எஸ்.பி-க்கு பளார் விட முற்பட்ட முதல்வர்.. அதிர்ச்சி வீடியோ லீக்..! 

அதிர்ச்சி தகவல் அம்பலம்:

இந்த பயங்கரவாத செயலில் ஈடுபட்ட நபர்களை இந்திய இராணுவம் தேடி வருகிறது. இந்நிலையில், பயங்கரவாத தாக்குதல் நடத்திய ஹசீம் மூஸா (Hashim Musa) என்ற பயங்கரவாதி குறித்து அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு பாரா கமாண்டோ படையில் பணியாற்றி இருக்கிறார். பின் பணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக தெரியவரும் நிலையில் காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவித்து சமீபத்தில் இக்கொடூரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 09:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).