Woman Removes Pant in Front of Passengers: விமான பயணத்தில் பயணிகளை பதறவைத்த பெண் பயணி: சிறுநீர் கழிக்கப்போவதாக பேண்டை அவிழ்த்து பகீர் செயல்.!
சிறுநீரை அடக்க இயலாமல் பரிதவித்த பெண்மணி, விமான பணிப்பெண்களிடம் கூச்சலிட்டு சர்ச்சை செயலை செய்தார்.
நவம்பர் 24, அமெரிக்கா (World News): அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம், ஒர்லாண்டோ (Orlando) நகரில் இருந்து, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா (Philadelphia) நகருக்கு, கடந்த நவம்பர் 20ம் தேதி விமானத்தில் பயணிகள் மற்றும் விமான குழுவினர் பயணம் செய்தனர்.
விமானம் தரையிறங்க சில நிமிடங்களே எஞ்சியிருந்துள்ளது. அச்சமயம் விமானத்தில் பயணித்த நடுத்தர வயது பெண்ணுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவே, அவர் கழிவறையை பயன்படுத்த முயற்சித்துள்ளார். ஆனால், அதில் ஏற்கனவே ஆட்கள் இருந்த காரணத்தால், விமான பணிப்பெண் சற்று காத்திருக்குமாறு கூறியுள்ளார். Mansoor Ali khan Appeared Police Station: திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு விவகாரம்: ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜரானார் மன்சூர் அலிகான்.!
ஆனால், சிறுநீரை அடக்க இயலாமல் பரிதவித்த பெண்மணி, விமான பணிப்பெண்களிடம் கூச்சலிட்டார். மேலும், விமானத்தில் சிறுநீர் கழிக்க கழிவறை செல்ல அனுமதி இல்லை என்றால் என்ன செய்வது? என்று கேள்வி எழுப்பியவாறு, விமானத்தில் தனது கால்சட்டை ஆடைகளை கழற்றி அமர்ந்தார்.
அவர் நடுவிமானத்தில் சிறுநீர் கழிக்கவில்லை எனினும், சிறுநீர் கழித்திடவா? என விமான பணிப்பெண்களை மிரட்டினார். இதனால் விமானத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகவே, விமானத்தில் பயணித்த பெண்மணி இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், குழந்தைகள், குடும்பத்தினர் என பலரும் பயணிக்கும் விமானத்தில் இவ்வாறான செய்கையில் ஈடுபட்ட பெண்ணிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து முகநூலில் இதனை பதிவு செய்துள்ளார்.
வீடியோ:
This is definitely an insane thing to do on a plane. pic.twitter.com/PJJUFh53ut
— Ian Miles Cheong (@stillgray) November 21, 2023
(The above story first appeared on LatestLY on Nov 24, 2023 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

