நவம்பர் 23, சென்னை (Cinema News): நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து மேடையில் நகைச்சுவைக்காக பேசியது வன்மையான கண்டனத்தை பெற்று வருகிறது. இதற்கு நடிகை திரிஷா வரை எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்படும் நிலையில், அவருக்கு பலருக்கும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இது வழக்காக மாறி, அவர் கைது வரை செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, முன்ஜாமீன் கேட்டு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அப்போது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் என குறிப்பிடுவதற்கு பதில், நுங்கப்பாக்கம் காவல் நிலையம் என குறிப்பிட்டு இருக்கிறார். Couple Enjoy Age Limit: மெனோபாஸ் நிலை வந்தால் பெண்களின் அந்த உணர்வு பறிபோகுமா?.. உண்மை என்ன?.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!
இதனால் முன்ஜாமீன் மனுவை தாமாக முன்வந்து வாபஸ் பெற்ற மன்சூர் அலிகான், நாளை மீண்டும் மனுதாக்கல் செய்யவுள்ளார். இதற்கு நீதிபதி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என கண்டனம் தெரிவித்தார். இதனிடையே, தான் தலைமறைவானதாக செய்திகள் வெளியானதாக கேள்விப்பட்ட மன்சூர் அலிகான், தான் தலைமறைவாகவில்லை என்று ஆடியோ வெளியிட்டு கூறினார்.
ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராக சம்மனும் வழங்கப்பட்டு இருந்தது. இதனால் நடிகர் மன்சூர் அலிகான், ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
இடம் - பொருள் - ஏவல் அறிந்து, நாவடங்கி பேசுதல் சான்றோருக்கு அழகு.
மன்சூர் அலிகானுக்கு ஆதரவா பேசுறதா நினைச்சு ஒட்டுமொத்த நடிகைகளையும் மன்சூர் அலிகானை விட 10 மடங்கு படுகேவலமா பேசியிருக்கான்...!
இவனையெல்லாம் பேச விட்டு வேடிக்கை பார்க்கப்போறிங்களா அல்லது சட்ட நடவடிக்கை எடுத்து களி திண்ண வைக்க போறிங்களா?@trishtrashers |… pic.twitter.com/Umr3hIRG5G
— Satheesh (@Satheesh_2017) November 22, 2023
மன்சூர் வெளியிட்ட ஆடியோ 💪💪💪#MansoorAliKhan pic.twitter.com/z7sOpEEdXA
— விஜய் ரசிகை🦋 (@Itsme__Visali) November 23, 2023