ஏப்ரல் 07, புதுடெல்லி (New Delhi): உலகளவில் நிலநடுக்கம் என்பது பெரும் அச்சுறுத்தலான இயற்கை பேரிடர்களில் ஒன்றாக இருக்கிறது. நிலநடுத்தட்டுகள் எனப்படும் டெக்ட்டானிக் பிளேட் (Technoic Plates) மீது அமைந்துள்ள நாடுகள் பெரிய அளவிலான நிலநடுக்கத்தை எதிர்கொண்டு உயிர்சேதம் மற்றும் பொருட்சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளை பொறுத்தமட்டில், கடந்த சில மாதங்களாகவே மிதமான அளவில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் அவை இந்தியாவையும் தாக்குகிறது. இதனால் இந்தியாவில் பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை எனினும், சில ஆண்டுகளில் அதற்கான வாய்ப்புகள் சாத்தியமாகலாம் என நிலவியல் ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது. Married Woman Suicide: கணவன் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை..!
அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள்: இந்நிலையில், நேற்று இரவு 10:55 மணியளவில், லடாக்கில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தமானில் நள்ளிரவு 01:05 மணியளவில் 4.3 ரிக்டர் அளவுகோல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், ஆப்கானிஸ்தான் (Afghanistan Earthquake) நாட்டில் நள்ளிரவு 02:26 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேற்கூறிய நிலநடுக்கங்கள் அனைத்தும் நேற்று இரவு முதல் நள்ளிரவுக்குள் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் ஏற்பட்டவை ஆகும். சிறிய அளவிலான நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
An earthquake of magnitude 4.3 on the Richter Scale hit the Andaman Sea at 01:05 am today: National Center for Seismology pic.twitter.com/GUS6loU9ml
— ANI (@ANI) April 6, 2024