
ஜூன் 21, நியூயார்க் (World News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருபவர் அனமரியா மிலாஸ்வ் (வயது 22). இவர் அங்குள்ள பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். இதே பள்ளியில் 14 வயதுடைய சிறுவன் பயின்று வருகிறார். இதனிடையே, அனமரியா சிறுவனுக்கு கடந்த 3 மாதங்களாக தனது நிர்வாண படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை கவனித்த சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். Israel Gaza War: பசிக்குது.. கதறும் குழந்தைகள்.. மண்ணை அள்ளி தின்ற சிறுவன்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ.!
தொடரும் புகார்கள்:
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் மீதான வழக்கு தொடர்ந்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தமட்டில் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியை மாணவர்களுடன் தனிமையில் இருந்ததாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து இருக்கின்றன. இவ்வாறான விஷயங்களுக்கு மத்தியில் தற்போது இந்த விஷயமும் நடந்துள்ளது.