
ஜூன் 20, ஜெருசலேம் (World news): இஸ்ரேல் - பாலஸ்தீனம் (Israel Gaza War) இடையே நடந்து வரும் போரை கைவிட வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலுக்கு பல கோரிக்கைகளை முன் வைத்தாலும், தங்களின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை எங்களது தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இதனால் காசாவில் வாழும் அப்பாவி பொதுமக்களும் தாக்குதலின் பெயரில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் ராணுவத்தின் பிடியில் மக்கள் :
காசாவில் வசித்து வரும் மக்களுக்கு உலக நாடுகள் முன்வந்து அடிப்படை உதவிகள் செய்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் அதையும் தடுத்து நிறுத்தி வருகிறது. ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் பேரில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வானிலை: மழையா? வெயிலா?.. அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம் இதோ.!
உணவுக்காக சென்ற 25 பேர் சுட்டுக்கொலை :
இதனிடையே சமீபத்தில் காசா நாட்டின் ரபாவில் நிவாரண பொருட்கள் விநியோகிக்கப்பட்ட போது ஏராளமான பாலஸ்தீனியர்கள் குவிந்ததால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் உணவில்லாமல் தவித்து வருகின்றனர்.
மண்ணை அள்ளி தின்ற சிறுவன் :
இந்த நிலையில் வடமேற்கு காசாவை சேர்ந்த பாலஸ்தீனிய சிறுவன் பசியில் கதறிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஒரு பை மாவு கிடைப்பது கூட சிரமமாக உள்ளது எனவும், நாங்கள் சாப்பிட கூட எதுவும் இல்லாமல் ஒரு ரொட்டி கூட கிடைக்காமல் கஷ்டப்படுவதாக கூறியுள்ளார். மேலும் மாவு இல்லாமல், உண்பதற்கு எதுவும் கிடைக்காமல் பசியில் மண்ணை அள்ளி திண்பதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
பசியில் கதறும் சிறுவன் (Gaza Boy Crying Video) :
"We are eating sand instead of bread."
A Palestinian child in northwestern Gaza cries out in frustration from extreme hunger, having lost hope of obtaining even a bag of flour amid a severe shortage of humanitarian aid pic.twitter.com/sk8byFfZUt
— TRT World (@trtworld) June 20, 2025