Cop Kathiravan TVK Vijay Madurai Visit (Photo Credit: @ThanthiTV X)

மே 03, மதுரை (Madurai News Today): தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய் (TVK Vijay), 2026 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தை தோற்றுவித்து தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கிறார். கட்சி நிர்வாகிகள் நியமனம், கட்சியின் செயல்பாடுகள் என விறுவிறுப்புடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் பயணத்துக்கு முன்னதாக திரைப்பட வாழ்க்கைக்கு தற்காலிக முடுக்கு போட்டுள்ள விஜய் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன் (Jana Nayagan) படத்தில் நடித்து வருகிறார். Kozhikode Hospital Fire: அரசு மருத்துவமனையில் தீ விபத்து.. 4 உயிர்கள் பரிதாப பலி..! 

விறுவிறுப்பாக தயாராகும் ஜனநாயகன்:

அரசியலுக்கு களமிறங்கும் முன் இதுவே விஜயின் இறுதி திரைப்படம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கொடைக்கானலில் நடைபெறும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புக்கு நடிகர் விஜய் நேரில் வந்தார். சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தவருக்கு ரசிகர்கள், தவெக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனிடையே, விஜயின் வருகைக்கு கட்சி அடையாளத்துடன் திருட்டுத்தனமாக வந்த காவலரின் செயலும் அம்பலமாகி இருக்கிறது.

காவலர் பணியிடைநீக்கம் (Police Officer Suspended TVK Vijay Visit):

மதுரையில் உள்ள தெப்பக்குளம் காவல் நிலைய அதிகாரி கதிரவன் மார்க்ஸ், விஜய் மதுரைக்கு வருகை தந்த நாளில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டார். அப்போது, அவசர விடுப்பு வேண்டும் என கேட்ட காவலருக்கு அதிகாரிகளும் விடுப்பு வழங்கியுள்ளனர். விடுப்பு எடுத்த காவலர் மதுரை விமான நிலையத்துக்கு விஜயை பார்க்க வந்துள்ளார். மேலும், விஜயின் கட்சி துண்டு மற்றும் அடையாளத்துடன் வந்தவர் கேமிராவில் சிக்கி இருக்கிறார். இதனால் அதிருப்தியடைந்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், காவலர் கதிரவனை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.