மே 12, டெக்ஸாஸ் (World News): அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர் ஸ்டீவன் ஆண்டர்சன் (வயது 64). இவர் சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வெளியே நடந்துசென்றுகொண்டு இருந்தார். அச்சமயம், அங்கு வந்த மர்ம நபர் ஒருவரால் கார் ஏற்றிக்கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்துக்கு விரைந்து ஆண்டர்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். Maggie Kills Young Boy: அரிசி சாதத்துடன் மேகி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்; குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.. 10 வயது சிறுவன் பலி.! 

சிசிடிவி கேமிராவில் அதிர்ச்சி காட்சிகள்: பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில்,ஆண்டர்சனின் மீது திருநங்கை ஒருவர் கார் ஏற்றிக்கொலை செய்தது தெரியவந்தது. 20 வயதாகும் காரோன் பிசிர் என்ற நபர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டார். இவர் ஆண்டர்சனை கொடூரமாக கொலை செய்திருக்கிறார். கொலைக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை. கரோனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டர்சனை கொலை செய்த குற்றவாளி, ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் ஆவார். 2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதத்தொகை செலுத்தி அவர் பிணையில் வெளியே வந்து தற்போது கொலை ஒன்றையும் செய்துள்ளார். மேலும், கொலை நடந்த அதே நாளில் திருநங்கை மருத்துவ பணியாளர் ஒருவரையும் தாக்கி இருக்கிறார்.