மே 12, பிளிம்பிட் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிளிம்பிட் மாவட்டம், புரான்பூர் தாலுகா, ராகுல் (Pilimbhit Minor Boy dies after Eating Maggie) நகரில் வசித்து வருபவர் சோனு. இவரின் சொந்த ஊர் டெஹ்ராடூன் ஆகும் சோனுவின் மனைவி சீமா. இவர்கள் இருவருக்கும் ரோகன், விவேக் என்ற 2 மகன்களும், சந்தியா என்ற மகளும் இருக்கிறார்கள். தம்பதி தங்களின் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மே 09ம் தேதி இவர்கள் இரவு உணவு சாப்பிட மேகி வாங்கி சமைத்து இருக்கின்றனர். சற்று வித்தியாசமாக இருக்கட்டும் என மேகியை சாதத்தை சேர்த்து மேகி சாதமாக சமைத்து சாப்பிட்டு இருக்கின்றனர். Northern Lights Seen in Ladakh: லடாக்கில் தோன்றிய அரோரா ஒளிவிளைவு; சூரியபுயலால் வானியல் அதிசியம்.! 

மோசமடைந்த உடல்நிலை: இதனிடையே, இரவு நேரத்தில் மேகி சாதம் சமைத்து சாப்பிட்ட குடும்பத்தினரின் சோனு, ரோஹன், விவேக், சந்தியா ஆகியோரின் உடனில்நலம் மோசமாகி இருக்கிறது. அவர்கள் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உடனடியாக மறுநாள் காலையில் அங்குள்ள கிளினிக்கில் இவர்கள் அனைவரும் அனுமதி செய்யப்பட்டுள்ளார். விவேக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி இருக்கிறது. Trichy Shocker: அம்மாவை காதலித்து ஏமாற்றிய இளைஞர்; நண்பருடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மகன்..! திருச்சியில் பகீர் சம்பவம்..!

10 வயது சிறுவன் பலி: இதனால் அங்குள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் குடும்பத்தினர் உடல்நலம் தேறி வீட்டிற்கு திரும்பினார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மருத்துவ பரிசோதனையில் மேகியுடன் சேர்த்து சமைக்கப்பட்ட அரிசி சாதம் விஷமாக மாறியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது உறுதியானது.