Police Jeep Stolen: போலீஸ் வாகனத்தை திருடிச்சென்ற நிர்வாண இளைஞர்; ஜிடிஏ வை சிட்டி கேம்போல பகீர் சம்பவம்.!
காவல் வாகனத்தை இயக்கத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கிய அதிகாரியின் வாகனத்தை திருடிச்சென்று குற்றவாளி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.
நவம்பர் 02, நெவாடா (World News): அமெரிக்காவில் உள்ள நெவாடா மாகாணம், லாஸ் வேகாஸ் நகரில் காவல் துறையினர் வழக்கமான தங்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது, தெற்கு நெவாடாவில் உள்ள Blue Diamond Road பகுதியில் காவலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அச்சமயம் இளைஞர் ஒருவர் உடலில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக நடந்து வந்தார்.
அவரை இடைமறித்த அதிகாரி, தனது காவல் வாகனத்தை இயக்கத்திலேயே நிறுத்திவிட்டு காரில் இருந்து இறங்கி விசாரணை செய்ததாக தெரியவருகிறது. BCCI Banned Display of Firework: பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதற்கு முட்டுக்கட்டைபோட்ட பிசிசிஐ; இனி கண்கவர் வானவேடிக்கை கிடையாது என அறிவிப்பு.!
அச்சமயம் சுதாரித்த இளைஞர், திடீரென காவலரின் பிடியில் இருந்து தப்பி காவல் வாகனத்தை இயக்கிச்சென்றார். இரவு 11 மணியளவில் இச்சம்பவம் நடந்த நிலையில், காவல் வாகனத்தை வைத்து விபத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் 2 அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை திருடிச்சென்ற குற்றவாளி கேபுளிசான் (Cabulisan), என்ற 29 வயது நபரும் கைது செய்யப்பட்டார்.
அவர் ஏற்கனவே பல்வேறு கொள்ளை, அதிகாரிக்கு கீழ்ப்படியாதது, மோட்டார் வாகனத்தின் பேட்டரி கொள்ளை உட்பட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்துள்ளார். நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த அதிகரிக்கும் லேசான காயம் அடைந்தார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)