நவம்பர் 02, புதுடெல்லி (Sports News): ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 தொடர், இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 13வது உலகக்கோப்பை கிரிக்கெட் (ICC Cricket World Cup 2023) தொடரை இந்தியா தலைமேயேற்று நடத்தி வருகிறது. நேற்று வரை 48 ஆட்டங்களில் 32 ஆட்டங்கள் நடைபெற்று முடிந்தன.
இன்று இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 33 வது ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியாவும் - இலங்கையும் வெற்றியை நோக்கி முன்னேற பலப்பரீட்சை நடத்தும் என்பதால், போட்டி ரசிகர்களால் அதிகளவு எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா (Jai Shah) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இனி டெல்லி மற்றும் மும்பை மாநகரங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், பட்டாசுகளால் மேற்கொள்ளப்படும் வான வேடிக்கைகள், வெற்றிகொண்டாட்டங்கள் இடம்பெறாது என தெரிவித்துள்ளார். Happy Birthday Shah Rukh Khan: இந்திய திரையுலகின் கிங் கான் - சாதனை நாயகன் ஷாருக்கானுக்கு இன்று பிறந்தநாள்..!
அதாவது, டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் காற்றுமாசு (Delhi & Mumbai Air Pollution) என்பது வெகுவாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் உள்ள மக்களின் நிலைமை, அவர்கள் சுவாசிக்கும் காற்று மாசுபாடு அடைந்து, பல்வேறு உடல்நலக்கோளாறுகளை எதிர்கொள்கின்றனர்.
இதனை தடுக்க மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை ஊக்கப்படுத்தும் விதமாக, மும்பை மற்றும் டெல்லி நகரங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில், இனி பட்டாசுகளால் (Firework Celebrations) காற்றை மாசுபடுத்தும் செயலை கைவிடப்போவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு ஐசிசி ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் மோதிக்கொள்கின்றன. 2 லீக் ஆட்டங்கள், அரையிறுதி என மும்பை மற்றும் டெல்லி மைதானங்களில் அடுத்தடுத்த போட்டிகள் காத்திருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு இந்த செய்தி சோகமாக அமைந்தாலும், சுற்றுசூழல் நலன் கருதி அதனை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது.
அதன்படி நவம்பர் 06ல் பங்களாதேஷ் - இலங்கை அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் டெல்லியிலும், நவ. 07ம் தேதி ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் மும்பையிலும், அரையிறுதி தகுதிச்சுற்று தேர்வில் நவம்பர் 15ல் நடைபெறும் ஆட்டம் மும்பையிலும் நடக்கவுள்ளது. இந்த ஆட்டங்களில் இனி வானவேடிக்கை காண இயலாது.