Passenger Aircraft Crashes: பயணிகள் விமானம் மோதி பயங்கர விபத்து.. நடுவானில் அதிர்ச்சி.. பலரின் நிலை என்ன?

நடுவானில் 2 விமானங்கள் மோதிக்கொண்ட நிலையில், ஆற்றில் விழுந்த விமானத்தில் பயணித்தோரை அதிகாரிகள் மீட்க முயற்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் இன்று வாஷிங்டனில் நடந்துள்ளது.

Passenger Aircraft Crashes: பயணிகள் விமானம் மோதி பயங்கர விபத்து.. நடுவானில் அதிர்ச்சி.. பலரின் நிலை என்ன?
Washington DC Airplane Crash (Photo Credit: @BNONews X)

ஜனவரி 30. வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவில் உள்ள வாஷிங்க்டன் மாகாணம், போட்டோமேக் நதிக்கரையில் இரண்டு விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கின. இலகுரக பயணிகள் விமானம் ஒன்று, வேறொரு விமானத்துடன் நடுவானில் மோதி ஆற்றுக்குள் விழுந்துள்ளது. நடுவானில் நடந்த இந்த சம்பவத்தால், ரேகான் விமான நிலையம் (Reagan National Airport) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், தகவல் அறிந்து சென்ற மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேற்படி களநிலவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. China’s Artificial Sun: சூரியனுக்கே போட்டி! சுமார் 10 கோடி செல்சியஸ் வெப்பம்.. செயற்கை சூரியனை உருவாக்கியுள்ள சீனா..!

மீட்பு பணிகள் தீவிரம்:

முதற்கட்டமாக ரோந்துக்கு வந்த காவல்துறை ஹெலிகாப்டரும், பயணிகள் இலகுரக விமானமும் மோதிக்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இலகுரக விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்த்தனர்? மோதிய மற்றொரு விமானத்தில் பயணித்தது எத்தனை பேர்? என விசாரணை நடக்கிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன.

நடுவானில் மோதிக்கொண்ட விமானங்களின் பதறவைக்கும் காட்சிகள்:

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 08:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).