Singer Mary Millben about Narendra Modi: பிரதமர் மோடியின் வருகைக்காக விழிவைத்து காத்திருக்கும் அமெரிக்க பாடகி; உற்சாக பேட்டி.!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் காரணமாக அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜூன் 18, நியூயார்க் (NewYork): அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் ஜூன் மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பயணத்தின் போது அமெரிக்காவில் வசித்து வரும் அமெரிக்காவாழ் இந்தியர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சர்வதேச விருதுபெற்ற பாடகி மேரி மில்பென், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா வருகையின் போது நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடல் பாடுகிறார். AI Platform Replace Million Jobs: 300 மில்லியன் பணியாளர்கள் வேலைக்கு ஆப்பு வைத்த AI தொழில்நுட்பம்; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மேம்பாட்டில் பகீர் தகவல்.!
இந்த நிகழ்வு குறித்து மனம்திறந்த பாடகி, "பிரதமர் நரேந்திர மோடியின் அரசுமுறை அமெரிக்கா பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும்-இந்தியாவும் உற்சாகத்தில் இருக்கிறது.
அமெரிக்கா-இந்தியா இடையேயான கூட்டணி மிகவும் வலுவுடன் இருக்கிறது. இது பிரதமர் மோடிக்கு கிடைத்த பெருமை ஆகும். பிரதமரை அமெரிக்காவில் வரவேற்க நான் ஆவலுடன் இருக்கிறேன்" என தெரிவித்தார்.
#WATCH | Award-winning International Singer Mary Millben to perform during the official state visit of PM Narendra Modi to the US
"The United States is in full anticipation and great excitement for the official state visit of PM Narendra Modi... India-US alliance is at its… pic.twitter.com/klmn5i2Zbb
— ANI (@ANI) June 18, 2023
(The above story first appeared on LatestLY on Jun 18, 2023 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

