Artificial Inteligence Layoff (Photo Credit: Pixabay)

ஜூன் 18, நியூயார்க் (Technology News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் கோல்டுமேன் சேக் நிறுவனம், தற்போது வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகளின் தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, சர்வதேச அளவிலான வேலையாட்கள் பணிநீக்கம் வரலாறு காணாத உச்சத்தை பெற்றுள்ள நிலையில், மனித சக்திகளுக்கு மாற்றாக AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) இயந்திரங்கள் பணிநியமனம் செய்யப்படுகின்றன. Wrestlers Protest: அரசியல் உள்நோக்கத்துடன் போராட்டமா? – ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் பேட்டி.! 

இதனால் மனித சக்தியின் ஆற்றல் என்பது அங்கு இல்லாமல் போனதால், வேலையிழப்புகள் தொடருகிறது. AI தொழில்நுட்பத்தின் வருகை காரணமாக சர்வதேச அளவில் 300 மில்லியன் வேலைகள் மனிதர்களுக்கு கிடைக்காமல் போயுள்ளது.

எதிர்காலத்தில் மனிதர்களின் தேவைக்கு என கண்டறியப்பட்டு வரும் இயந்திரங்கள் மனிதர்களுக்கான வேலைகளை குறைக்கவும், சுலபமாகவும் என அறிமுகம் செய்யப்பட்டு, பின்னாளில் அவை மனிதர்களின் இடங்களை பிடித்து வருகிறது.