Copper Water Cane & Pot (Photo Credit: India Mart / Amazon)

மே 26, சென்னை (Health Tips): நமது உடலுக்கு நன்மை செய்ய பல விஷயங்களை நம் முன்னோர்கள் நம்மிடையே மறைமுகமாக சொல்லிவிட்டு சென்றாலும், நமது உடலுக்கு நன்மை வழங்கும் விஷயத்தை நாம் தெளிவாக தெரிந்துகொண்டு அளவோடு அதனை உடலுக்கு எடுத்துக்கொள்வதே நல்ல உடல்நலத்திற்கு வழிவகை செய்யும். போலியான செய்திகளால் முழுவதுக்கும் ஆசைப்பட்டால் சோகமே எஞ்சும்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட உடல்நலக்கோளாறுகள் காரணமாக, இன்றளவில் பலரும் தங்களின் முன்னோர்கள் பின்பற்றி வந்த வழி என்று கூறி முந்தைய வழக்கங்களை பின்பற்ற தொடங்கிவிட்டனர். நாம் உபயோகம் செய்து வந்த பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களின் கேடுகளை உணர்ந்து களிமண், அலுமினியம், செம்பு போன்ற பொருட்களில் தயார் செய்யப்படும் கேன்களை உபயோகம் செய்து வருகின்றனர்.

செம்பில் செய்யப்படும் பாத்திரத்தில் நீர் பருகினால் உடலுக்கு நல்லது என்றாலும், அவற்றை அடிக்கடி பருகுதல் உடல் நலத்திற்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனாலேயே நம் முன்னோர் "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பதை நம்மிடையே கூறிச்சென்றனர்.

செம்பு இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி, நரம்பு செல்கள் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம், கொலாஜன் உற்பத்தி, எலும்புகள், திசுக்களின் வளர்ச்சி உட்பட பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. சிறந்த ஆண்டி - ஆக்சிடென்டுகளாக செயலாற்றும் செம்பில், டி.என்.ஏ செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ரேடிக்கல்களின் வீரியத்தை கட்டுப்படுத்தும். University HOD Video: கல்லூரி மாணவியை படுக்கைக்கு அழைத்த காமப்பேராசிரியர்; அதிர்ச்சி வீடியோ வைரல்..!

செம்பு பொருட்களில் நிரப்பி வைக்கப்படும் நீரை அதிகளவு குடித்தால் ஏற்படும் உடல் பிரச்சனை தொடர்பாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை எப்போதாவது குடிப்பது மேற்கூறிய நன்மையை தரும். அடிக்கடி அதனை குடிப்பது இரத்த சுத்திகரிப்பு விஷயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.

இயற்கையில் செம்பு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது ஆகும். இதனை அடிக்கடி பருகினால் இரத்த சுத்திகரிப்பு செயல்முறை இயல்பை விட அதிகரிக்கும். இதனால் சிறுநீரகம், கல்லீரல் பாதிப்படையும். செம்பு துகள்களை சுவாசித்தால் தொண்டை, மூக்கு பகுதியில் எரிச்சல் ஏற்படும். தலைவலி, தலைசுற்றல் பாதிப்பு உண்டாகும்.

இரவு நேரத்தில் 6 மணிநேரம் முன்பு செம்பு பாத்திரத்தில் நீரை சேகரித்து பருகுவதே சரியான வழிமுறை ஆகும். நாளொன்றுக்கு இரண்டு டம்ப்ளர் நீர் மட்டும் போதுமானது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் செம்பு நீர் குடிப்பது உடலுக்கு நல்லது. ஒரு நாளைக்கு 10 மில்லி மேல் செம்பு கலந்த நீரை குடித்தால் கட்டாயம் அது தொடர்பான பிரச்சனை ஏற்படும்.