Israel-Hamas War: மேற்கு கரையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. 5 பேர் பலி..!
மேற்கு கரையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து 5பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 28, காசா (World News): இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் (Israel Hamas War) கடந்தாண்டு அக்டோபரிலிருந்து நடந்து வருகிறது. இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனை நிராகரித்து விட்டார். மேலும் 14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்தனர்.
ரஃபா தாக்குதல்: அதனைத் தொடர்ந்து இஸ்ரேல் தெற்கு காசாவின் ரஃபா பகுதியில் தான் தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் மே 26 ஆம் தேதி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 45 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 249 பேர் காயமடைந்ததாகவும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன. Girl Drills Hole In Patient Skull: அறுவை சிகிச்சையின் போது நோயாளியின் மண்டை ஓட்டை துளையிட்ட சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்..!
பசியால் இறக்கும் குழந்தைகள்: அதுமட்டுமின்றி ஐ.நா வல்லுநர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவலைத் தெரிவித்துள்ளனர். அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதுவரை சுமார் 34 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் என தெரிவித்துள்ளனர். மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வான்வழி தாக்குதல்: இந்நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் வடக்கில் தாக்குதலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஜெனின் நகரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவம் தரப்பில், ஜெனின் மற்றும் துல்கர்மில் பயங்கரவாதத்தை முறியடிக்க பாதுகாப்புப் படைகள் தாக்குதலை தொடங்கியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Aug 28, 2024 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

