ஆகஸ்ட் 27, வியன்னா (World News): ஆஸ்திரிய அறுவை சிகிச்சை மருத்துவர் (Surgeon) தனது 13 வயது மகளை நோயாளியின் மண்டை ஓட்டில் (Skull) துளையிட அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், வன விபத்தில் சிக்கிய 33 வயதான ஒரு நபர், தலையில் பலத்த காயங்களுடன், தென்கிழக்கு ஆஸ்திரியாவின் ஸ்டைரியாவில் (Styria) உள்ள கிராஸ் மருத்துவமனையில் (Graz Hospital) அனுமதிக்கப்பட்டார். Burkina Faso Terror: ஒன்றா இரண்டா.. பயங்கரவாதிகள் தாக்குதலில் 200 பேர் பலி.. கொத்துக்கொத்தாக மடிந்த மக்கள்..!
இதனையடுத்து, அவருக்கு அவசர அறுவை சிகிச்சை (Surgery) செய்யப்பட்டது. அப்போது, மருத்துவர் மற்றும் அவரது 13 வயது சிறுமியும் அறுவை சிகிச்சை அறைக்குள் இருந்ததாக கூறப்படுகிறது. சிறுமி நோயாளியின் மண்டை ஓட்டில் துளையிட்டதாக வெளிவந்துள்ளது. இருந்தபோதிலும், அறுவை சிகிச்சை செய்து, அவர் குணமடைந்துவிட்டார். ஆனால், அவரால் பழைய இயல்பு நிலையை அடைய முடியவில்லை.
இதுகுறித்து, அவர் மருத்துவ நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். ஆனால், அவர்கள் இதற்கு எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அப்போது, சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, முழு அறுவை சிகிச்சை குழுவிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.