Lay's Potato Chip: லேஸ் சிப்ஸ் சாப்பிடுவதால் உடலில் வரும் பிரச்சனைகள் என்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே..!

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வாஷிங்டனில் உள்ள ஓரிகானில் உள்ள 6,344 பைகள் லேஸ் கிளாசிக் உருளைக்கிழங்கு சிப்ஸை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

Lay's Potato Chip: லேஸ் சிப்ஸ் சாப்பிடுவதால் உடலில் வரும் பிரச்சனைகள் என்ன? தெரிஞ்சிக்கோங்க மக்களே..!
Lay's Potato Chip (Photo Credit: Pixabay)

ஜனவரி 31, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனத்தின் பிரபலமான சிப்ஸ்களில் ‘லேஸ்' (Lay's Chip) வகை மிகவும் பிரபலமானது. இந்த வகை சிப்ஸ்களைத் தயாரிக்க எப்எல்-2027 என்ற வகை உருளைக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த லேஸ் சிப்சை பாமாயில் கொண்டு தயாரித்து வருகின்றனர். பொதுவாகவே பாமாயில் கொண்டு தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் ஆரோக்கியமற்றது என்று இந்திய மக்களிடம் நம்பப்பட்டு வருகிறது. பொதுவாகவே, சூரியகாந்தி எண்ணெய்யை விட பாமாயில் விலை குறைவு என்பதால் இந்தியாவில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் பாமாயில் கொண்டே தயார் செய்யப்படுகிறது. Passenger Aircraft Crashes: பயணிகள் விமானம் மோதி பயங்கர விபத்து.. நடுவானில் அதிர்ச்சி.. பலரின் நிலை என்ன?

திரும்பப் பெறப்பட்ட லேஸ் சிப்ஸ்:

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) வாஷிங்டனில் உள்ள ஓரிகானில் உள்ள 6,344 பைகள் லேஸ் கிளாசிக் உருளைக்கிழங்கு சிப்ஸை வகுப்பு 1 திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ஏனென்றால், இந்த தயாரிப்பில் வெளிப்படுத்தப்படாத பால் மூலப்பொருள் உள்ளது. இந்த கலவையானது சிலருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று FDA கூறுகிறது. ஒரு நுகர்வோர் புகார் செய்ததை அடுத்து ஃபிரிட்டோ-லேஸ் நிறுவனம் தானாக முன்வந்து திரும்பப்பெறுதலை செயல்படுத்தியது. இந்த ரீகால் லேஸ் கிளாசிக் உருளைக்கிழங்கு சிப்ஸுக்கு மட்டுமே பொருந்தும், இவை ஒரேகான் மற்றும் வாஷிங்டனில் உள்ள சில்லறை மற்றும் ஆன்லைன் ஸ்டோர்களில் விற்கப்படுகின்றன. மொத்தம் 6,344 பைகள் திரும்பப் பெறப்பட்டன.

(The above story first appeared on LatestLY on Jan 31, 2025 10:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).