Minor Raped While Drinking Alcohol: போதையில் உறங்கிய 16 வயது சிறுமி பலாத்காரம்.. வீடியோ எடுத்து ஸ்னாப்சாட்டில் பதிவிட்ட இளைஞரின் பகீர் செயல்.!
நள்ளிரவு நேரத்தில் ஊரைசுற்றிவிட்டு, நண்பனின் வீட்டில் மதுபானம் அருந்தி உறங்கிய சிறுமி 19 வயது இளைஞரால் பலாத்காரம் செய்யப்பட்டார். 2 ஆண்டுகள் விசாரணைக்கு பின்னர் இளைஞருக்கு 11 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 08, நெல்சன் (World News): நியூசிலாந்து நாட்டில் உள்ள நெல்சன் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு, கடந்த 2020ம் ஆண்டு 19 வயது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பெண்மணி இரவு வேளைகளில் தனது தோழி ஒருவருடன் ஊர் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. இதன்பேரில் ஒருநாள் சம்பந்தப்பட்ட இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஸ்னாப்சாட் நட்பு: இருவரும் ஸ்னாப்சாட் செயலி வழியாக பேசிப்பழகி வந்துள்ளனர். இந்நிலையில், ஜூன் 2021ல் சிறுமி தனது தோழியுடன் ஊர்சுற்றி இருக்கிறார். பின்னர், தனது நண்பருக்கு தோழி தொடர்புகொண்டு பேசவே, அவர் தனது தோழி மற்றும் அவரது பெண் நண்பரை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
போதையில் உறங்கிய தோழி கற்பழிப்பு: இவர்கள் இருவரும் மதுபானம் கேட்க, அங்கு இரண்டு பெண்களும் மது அருந்தி இருக்கின்றனர். பின்னர் போதையில் வீட்டில் அலப்பறை செய்துவிட்டு உறங்கியதாக தெரியவருகிறது. அச்சமயம் தனது தோழியின் மீதான பார்வை இளைஞருக்கு மாறவே, மதுபோதையில் உறங்கிய சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். Hosur iPhone Plant by TATA: ஓசூரில் பிரம்மாண்டமாக உருவாக்கப்படும் ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை: 50,000 பேருக்கு 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு.!
சமாளித்த இளைஞனும், வெளியான வீடியோவும்: இதனை விடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார். பலாத்காரம் செய்யப்பட்டது கூட தெரியாமல் பெண்மணி காலையில் எழுந்தபோது, இரவு அலப்பறை செய்துவிட்டு இருவரும் உறங்கிவிட்டதாக சாதுர்யமாக இளைஞர் சமாளித்து இருக்கிறார். இதற்கிடையில், சம்மந்தப்பட்ட சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டபோது பதிவான வீடியோ, இளைஞரின் ஸ்னாப்சாட் பக்கத்தில் பதிவு செய்யபட்டுள்ளது.
வீடியோ வெளியானதால் புகார்: இந்த வீடியோவைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபர்கள் பெண்ணுக்கு விபரத்தை தெரிவித்துள்ளார். பின்னர் வீடியோ ஸ்னாப்சாட் பக்கத்தில் நீக்கப்பட்டாலும், சுமார் 10 பேர் அதனை பார்த்துள்ளனர். பின் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
தீர்ப்பு: கடந்த டிசம்பர் 04ம் தேதி வழக்கின் இறுதி விசாரணை நிறைவுபெற்ற நிலையில், இளைஞரை சிறார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்த நீதிபதிகள், 11 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை தீர்ப்பாக அளித்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Dec 08, 2023 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

