டிசம்பர் 08, சென்னை (Chennai): ஆப்பிள் ஐபோன் நிறுவனம் மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தனது செல்போன் தயாரிப்பு நிறுவனங்களை வைத்துள்ளது. இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய விரும்பிய நிலையில், டாடா நிறுவனம் அதற்கான வாய்ப்புகளை கைப்பற்றியது. அதன்படி, இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு நிறுவனம் அமைக்கப்படுவது உறுதியானது.
கையெழுத்தான ஒப்பந்தம்: இதனையடுத்து, கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஜப்பானின் விஸ்ட்ரான் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் பரிமாறப்பட்டது. 12 முதல் 18 மாதங்களுக்குள் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவும் பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. Delhi Shocker: கற்பழிப்பு புகாரை வாபஸ் பெற மறுத்ததால் ஆத்திரம்: 17 வயது சிறுமி மீது ஆசிட் தாக்குதல்: குற்றவாளி ஆசிட் குடித்து பலி.!
50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: இதன் வாயிலாக சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024ல் ஐபோன் உற்பத்தியை தொடங்கி, ஐபோன் 16 முழு இந்திய தயாரிப்பாக சந்தைகளில் அறிமுகம் செய்ய ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கோலார் ஐபோன் பாகங்கள் உற்பத்தி நிறுவனம்: ஆப்பிளுக்கு தற்போது ஐபோன் பாகங்கள் வழங்கி வரும் ஜப்பானின் விஸ்டார்ன் நிறுவனத்தின் தொழிற்சாலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் பகுதியில் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பணியாளர்களுடன் 4 லைன்கள் அமைப்பு கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், ஓசூரில் டாடா நிறுவனம் சார்பில் அமைக்கப்படும் தொழிற்சாலையில் 10 லைன்கள் கொண்டு செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரவேற்பு அதிகரிக்கும்: இதனால் வரும் 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஐபோன் உற்பத்தி இந்தியாவில் தொடங்கவுள்ளதால், அதற்கான வரவேற்பும் மென்மேலும் அதிகரிக்கும்.