Alien UFO Video: அமெரிக்க இராணுவ விமானத்தை கடந்து சென்ற ஏலியன் தட்டுகள்; நொடியில் அசுரவேகம்.. வைரலாகும் வீடியோ.!
பூமி, விண்வெளியின் மீது ஆர்வமுள்ளவர்களாக இருக்கும் வானியல் அறிஞர்கள் தினமும் பல கிரகங்களை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், ஏலியன்களின் இருப்பிடம் குறித்த தகவல் மட்டும் இன்று வரை கேள்விக்குறிதான்.
ஏப்ரல் 25 (World News): வானியல் (Space Research) தொடர்பான ஆராய்ச்சிகள் தொடங்கிய நாட்களில் இருந்து ஏலியன்கள் (Alien) என்ற வேற்றுகிரக வாசிகள் குறித்த பல்வேறு பேச்சுக்கள் இன்று வரை பல விடைதெரியாத கேள்விகளுடன் உலாவி வருகிறது.
அமெரிக்கா (America) போன்ற மேலை நாடுகளில் அவ்வப்போது வானில் வேற்றுகிரக வாசிகளின் வாகனமான பறக்கும் தட்டுகளை
(Flying UFO) பார்த்ததாகவும், அவை சில மனிதர்களை அழைத்து சென்று மீண்டும் ஆராய்ச்சி செய்து விட்டுவிட்டது என்றும் பல கதைகள் இருக்கின்றன. ICC Test Final Team India: ஆண்கள் டெஸ்ட் உலகக்கோப்பை போட்டித்தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
இந்த நிலையில், ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், ஏலியன்கள் இருப்பது உன்னை என கூறி உரையாடப்பட்டுள்ளது. மேலும், அந்த வீடியோ அமெரிக்கா இராணுவத்தின் விமான பயிற்சியின்போது எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் இராணுவ அதிகாரிகள் தங்களின் இராணுவ விமானத்தில் பறந்துகொண்டு இருக்கும்போது, அவர்களுக்கு நெடுந்தொலைவில் தட்டு போன்ற வாகன அமைப்பு விரைந்து அங்கிருந்து கடந்து செல்கிறது. இந்த விடியோவை பதிவிட்டுள்ளவர், அதனை ஏலியன்களின் வாகனம் என குறிப்பிட்டுள்ளார்.
Captivating Video of Orb Shaped UFO Released by Pentagon | Real UFO Video | Pentagon UFO Disclosure #uap #ufo #ufosightings #nasa #space #alien #aliens #ovni #spacenews #ufonews #aliensnews #nasanews #ElonMusk #realufo #pentagon #pentagonufo #ufotwitter pic.twitter.com/Lrkd11ODnI
— The UFO News (@kredisi_destek) April 25, 2023
(The above story first appeared on LatestLY on Apr 25, 2023 02:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

