Team India ICC Worldcup Championship Final (Photo Credit: Twitter BCCI)

ஏப்ரல் 25, புது டெல்லி (Sports News): இந்தியாவில் தற்போது ஐ.பி.எல் 2023 தொடர் (TATA IPL 2023) நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, இந்திய அணி ஐ.சி.சி உலகக்கோப்பை டெஸ்ட் (ICC Test Worldcup) கிரிக்கெட்டில் விளையாடவுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பி.சி.சி.ஐ (BCCI) தனது அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ஐ.சி.ஸ் ஆண்கள் உலகக்கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய ஆஸ்திரேலிய (Team Australia) அணியை எதிர்கொள்வது ஏற்கனவே முடிவாகி இருந்தது. இந்திய அணி (Team India) - ஆஸ்திரேலிய அணி லண்டனில் உள்ள தி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இறுதி ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

இந்த இறுதி போட்டி 7ம் தேதி ஜூன் 2023-ல் தொடங்கி 11ம் தேதி ஜூன் 2023-ல் நிறைவடைகிறது. டெஸ்ட் தொடரில் நடப்பு ஆண்டு சாம்பியன் தேர்வு செய்யப்படும்போட்டி இது என்பதால் ஆட்டம் விறுவிறுப்புடன் இருக்கும். Modi Greetings to Child: மொழிகளை கடந்து இதயங்களை வென்ற இசை; சிறுமியின் அசத்தல் இசையும், பாடலும்..!

இந்நிலையில், இந்திய அணியை பி.சி.சி.ஐ தலைமை செயலர் ஜெய் ஷா (Jai Shah) அறிவித்துள்ளார். அதன்படி, பி.சி.சி.ஐ நிர்வாக குழு ஆலோசனை செய்து அணியின் வீரர்களை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்புப்படி ரோஹித் ஷர்மா (Captain Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை இலண்டன் மண்ணில் எதிர்கொள்கிறது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, சுப்னம் ஹில், சேடேஸ்வர் புஜாரா, விராட் கோஹ்லி, ரஹானே, கே.எல் ராகுல், கே.எஸ் பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷரத்துள் தாகூர், முகம்மத் சமி, முகம்மத் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.