Dog Attack to Death: 6 வயது சிறுவனை கடித்து குதறிய வளர்ப்பு நாய்., பெண் படுகாயம்: 3 மாத பிஞ்சு பலியான சில நாளில் நடந்த சோகம்.!
இவ்வாறான சோகங்கள் தொடருகின்றன.
டிசம்பர் 07, நியூயார்க் (New York): அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணம், போர்ட்லாண்ட் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுவன், தனது குடும்ப நண்பரின் வீட்டிற்கு தினமும் பள்ளிக்கு செல்வதற்கு முன்பு செல்வார் என கூறப்படுகிறது.
ஆசையாக சென்ற சிறுவனுக்கு சோகம்: நேற்று சிறுவன் தனது குடும்ப நண்பரின் வீட்டிற்கு (Dog Killed 6 Aged Boy) சென்றபோது, வீட்டின் உரிமையாளரான பெண்மணி குப்பையை போட வெளியே வந்துள்ளார். அவருடன் அவரின் வளர்ப்பு நாய் ஒன்றும் இருந்துள்ளது. Bihar Shocker: வரதட்சணை வழக்கில் சிறைக்குச்சென்று வந்த கணவர் வெறிச்செயல்: 24 வயது இளம் மனைவி, 2 குழந்தைகள் கொடூர கொலை.!
கொடூரமாக தாக்கிய வளர்ப்பு நாய்: இந்நிலையில், சிறுவனை கண்ட நாய், அவரை பலமாக தாக்கி கடித்து குதறி இருக்கிறது. நாயிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற பெண்மணி போராடியும் பலனில்லை. இந்த சம்பவத்தில் நாயினால் பெண்ணும் தாக்கப்பட்டு, கைகளில் பலத்த காயம் இருந்துள்ளது.
குழந்தையின் மரணம் உறுதி: இதனையடுத்து, அவசர குழுவினருக்கு அழைப்பு கிடைத்ததைத்தொடர்ந்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். நாய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. பெண்மணி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். Delhi Winter Vacation: டெல்லியில் குளிர்கால விடுமுறை தேதிகள் அதிரடி மாற்றம்: மாநில கல்வித்துறை அதிரடி அறிவிப்பு.! காரணம் என்ன?..!
ஒரு சோகம் மறைவதற்குள் மற்றொன்று: கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அலபாமா மாகாணத்தில், பிறந்து 3 மாதங்களேயான பச்சிளம் குழந்தை கலப்பினத்தில் உருவாக்கப்பட்ட நரி ரக நாயின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தது. இதனிடையே மீண்டும் வளர்ப்பு நாயினால் மற்றொரு சோகம் நடந்துள்ளது.