Girl Died Falling Manhole: பாதாள சாக்கடையில் விழுந்து 2 வயது சிறுமி பரிதாப பலி.!
பாகிஸ்தானில் திறந்து கிடைக்கும் பாதாள சாக்கடை அமைப்புகளில் சிக்கி உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை தொடருவது சோகத்தை தருகிறது.
நவம்பர் 26, கராச்சி (Pakistan News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியை சேர்ந்த சிறுமி, தவறுதலாக திறந்து கிடந்த பாதாள சாக்கடையில் விழுந்து பரிதாபமாக பலியாகினர்.
கராச்சியில் உள்ள மேமன் கோத் பகுதியில் வசித்து வரும் 2 வயது சிறுமி முஸ்கன், பாதாள சாக்கடையில் விழுந்து பரிதாபமாக பலியாகி இருக்கிறார். Cuddalore Shocker: காதல் திருமணத்தை கண்டித்த தாய் கொலை., வீட்டில் குழிதோண்டி புதைப்பு: கஞ்சா குடிக்கியான 22 வயது இளைஞரால் பயங்கரம்.!
இந்த விஷயம் தொடர்பாக தனது இரங்கல் கருத்தை பதிவு செய்த கராச்சி துணை மேயர் சால்மன் அப்துல்லா முராத், சிறுமியின் மறைவு இரங்கல் தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் சிறுவன் அடித்து செல்லப்பட்டு பலியான நிலையில், அச்சம்பவம் நடந்த 2 மாதங்கள் கழித்து இத்துயரம் நடந்துள்ளதாகவும் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.
பாதாள சாக்கடையை திறந்து வைத்த குற்றம் தொடர்பாக விசாரணை நடத்தி, தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதேபோல, அங்குள்ள பஞ்சாப் லியாகுட்பூர் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 8 வயதுடைய சிறுமி, அவரின் 10 வயதுடைய சகோதரர் ஆகியோர் பாதாள சாக்கடையில் விழுந்து பலியாகினர். இருவரும் மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் வைத்து பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(The above story first appeared on LatestLY on Nov 26, 2023 07:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

