![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/11/Victim-Kasthuri-Accuse-Shewak-Photo-Credit-X-380x214.jpg)
நவம்பர் 25, திட்டக்குடி (Cuddalore Crime News): கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி (Tittakudi, Cuddalore) தொளார் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரின் மனைவி கஸ்தூரி (வயது 47). தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள், மகள்கள் இருக்கின்றனர். பெண் குழந்தைகள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்துவிட்டதை தொடர்ந்து, அவர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். ராஜேந்திரன் வேலை காரணமாக திருப்பூரில் தங்கி இருந்து பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகனும் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.
கஸ்தூரி - ராஜேந்திரன் தம்பதிகளுக்கு 22 வயதுடைய சேவாக் என்ற கடைக்குட்டி மகன் இருக்கிறார். இவர் இளவயதிலேயே கிடைத்த தவறான சவகாசத்தால், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனது தாயாருடன் வீட்டில் தங்கி இருந்தவர், எப்போதும் தனது அன்றாட செலவுகளுக்கு அன்னையின் கைகளையே எதிர்பார்த்து இருந்துள்ளார். மேலும், கஸ்தூரி விவசாய கூலியாக வேலைக்குச் சென்று, தனது மகனின் செலவுக்கும் பணம் கொடுத்து வந்திருக்கிறார். Kantara Chapter1: காந்தாரா தரிசனத்திற்கு தயாராகுங்கள்: காந்தாரா முதல் பாகத்தின் முதற்பார்வை வெளியீடு தேதி அறிவிப்பு.!
![](https://tmst1.latestly.com/wp-content/uploads/2023/05/1-9.jpg)
சம்பவத்தன்று தனது மாமாவின் வீட்டிற்கு கண்ணீருடன் சென்ற சேவாக், தனக்கு பசிக்கிறது என்றும், அம்மாவை காணவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதனையடுத்து சேவாக்குக்கு உணவு கொடுத்து சாப்பிட வைத்த அவரின் மாமா, இரு சக்கர வாகனத்தில் சேவாக்கை அழைத்துக்கொண்டு கஸ்தூரியை பல இடங்களில் தேடிப் பார்த்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சேவாக்கின் நடவடிக்கை சந்தேகத்தை அளிக்கவே, இருவரும் வசித்து வந்த கூரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டுக்குள் சென்றபோது புதிதாக குழி தோண்டி மூடப்பட்டது போன்ற அடையாளம் இருந்துள்ளது.
எதற்காக இங்கு பள்ளம் தோன்டினாய்? என்று கேட்டதும், சேவாக் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சுதாரித்துக் கொண்ட அவரின் மாமாவும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேவாக்கை விரட்டி பிடித்து அடிக்க, வலிபொறுக்க இயலாமல் தனது தாயை கொலை செய்த பகீர் தகவலை ஊர்மக்கள் முன்னிலையில் சேவாக் கக்கி இருக்கிறார். இதனால் உச்சகட்ட ஆவேசமடைந்தவர்கள், மேலும் நையப்புடைத்தனர். The Gabba Stadium Renovation: வரலாற்றை மாற்றி எழுதிய இந்தியா: ஆஸி., கிரிக்கெட் அணியின் கோட்டையை இடிக்கும் அரசு..! விபரம் இதோ.!!
விசாரணையில், கடந்த 21 ஆம் தேதியை தாயை கொலை செய்து சடலத்தை வீட்டுக்குள் புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். உறவினர்கள் சேவாக்கிடம் விசாரிக்கும் போது, தான் ஒரு பெண்ணை வீட்டுக்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்ததாகவும், அந்த பெண் கோவையில் தங்கி இருந்து வேலை பார்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.
![](https://tmst1.latestly.com/wp-content/uploads/2023/11/Spot-Visual-Accuse-Shewak-Photo-Credit-X.jpg)
இந்த காதல் திருமணத்திற்கு தாய் கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சம்பவத்தன்று தனது காதலியை நேரில் பார்த்துவிட்டு மதுபோதையில் சேவாக் வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த கஸ்தூரி, மகனை கடுமையாக கண்டித்து இருக்கிறார். இது சேவாக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, அரிவாளால் தாயை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து இருக்கிறார்.
பின் கொலையை மறைக்க, சடலத்தை வீட்டுக்குள் புதைத்து ஒன்றும் தெரியதுபோல ஊரில் நடந்துகொண்டுள்ளார். இறுதியாக பசியால் மாமாவின் வீட்டிற்கு சாப்பிட சென்று, அவரிடம் அழுது புலம்பி சிக்கி இருக்கிறார். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து வந்து கஸ்தூரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், 22 வயது இளைஞர் சேவாக்கை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. படிக்கும் வயதில் படிப்பை மட்டும் நம்பாமல், தவறான நண்பர்கள் சவகாசத்தால் கஞ்சா, மது போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி, பெற்றோர் உழைப்பில் சாப்பிட்டு ஊதாரியாக தெருவை சுற்றி வந்த 22 வயது இளைஞர், இறுதியில் தனது தாயை கொலை செய்து குற்றவழக்கில் கைதாகி இருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.