Indian Diaspora Raise Slogans: துபாயில் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு: "மோடி ஆட்சியே, வந்தே மாதரம்" என முழங்கிய இந்தியர்கள்.!
சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வரும் உலக காலநிலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாடும் காலநிலைக்கு முக்கியத்துவம் தரவேண்டி நடக்கும் ஆலோசனை எதிர்காலத்திற்கு அவசியமாகிறது. நடப்பு ஆண்டின் இறுதியில், உலக காலநிலை உச்சி மாநாடு துபாயில் நடைபெறுகிறது.
டிசம்பர் 01, துபாய் (Dubai): இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் உலக காலநிலை உச்சி (World Climate Action Summit) மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றார். துபாய் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் அமீரக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அமீரகத்தின் துணை பிரதமர் (Arab Emirates Deputy Prime Minister), உள்துறை அமைச்சர் ஷேக் சைப் பின் சையத் அல் நஹ்யான் பிரதமரை விமான நிலையத்திற்கு சென்று நேரில் வரவேற்றார்.
இந்தியர்களின் முழக்கம்: இதனையடுத்து, பிரதமர் வருகை காரணமாக அங்குள்ள இந்தியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்த நிலையில், பலரும் பிரதமர் தங்கவிருந்த நட்சத்திர விடுதிக்கு நேரில் வந்து பிரதமரை சந்தித்தனர். அங்கு முகாமிட்டிருந்த இந்தியர்கள், "அடுத்த பிரதமரும் நரேந்திர மோடியே, வந்தே மாதரம் (Vande Mataram)" என்ற முழக்கத்தையும் எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். Most Popular Indian Movies of 2023: இந்த ஆண்டுக்கான சிறப்பு திரைப்படங்கள் பட்டியலை வெளியிட்டது iMDB.. ஜெயிலரை பின்னுக்கு தள்ளிய லியோ.. ஷாருக்கான் மீண்டும் சாதனை.!
அமெரிக்கா, இங்கிலாந்து அதிபர்களுடன் சந்திப்பு: சர்வதேச அளவில் நடைபெறும் காலநிலை உச்சி மாநாட்டில், அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட பலரும் கலந்துகொள்கிறார்கள். உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அதனைத்தொடர்ந்து, பிற நாட்டு தலைவர்களுடன் சந்தித்து ஆலோசனை கூட்டமும் நடைபெறுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)