நவம்பர் 30, சென்னை (Chennai): 2023ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நாம், நடப்பு ஆண்டில் நம்மில் நீங்காத இடம்பிடித்த பல்வேறு விஷயங்களை நினைத்துப்பார்ப்போம். அந்த வகையில், திரைத்துறையில் நம்மிடையே வரவேற்பு (Best Indian Movies of 2023) பெற்று, பிரபலமான திரைப்படங்களின் பட்டியல், தற்போது ஐஎம்டிபி இந்தியா (iMDB India) நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனவரி 01, 2023 முதல் நவம்பர் 06, 2023 வரையில் திரையரங்கில் வெளியிடப்பட்ட படங்களில், ஐஎம்டிபி பக்கத்தில் 5 புள்ளிகள் அல்லது 10 முறைக்கு மேல் ஐஎம்டிபி பயனர்களால் தேடப்பட்ட தரவுகளை சேகரித்து இம்முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து திரைப்படங்கள் குறித்து நாம் தொடர்ந்து தெரிந்துகொள்ளலாம்.
10. போலா (Bholaa): 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தை, ஹிந்தியில் அஜய் தேவ்கன் போலா என்ற பெயரில் இயக்கி, நடித்து, தயாரித்து 2023ல் வெளியிட்டார். இந்த படம் ரூ.100 கோடி பொருட்செலவில் தயாராகி, ரூ.111 கோடி வரை வசூல் பாக்ஸ் ஆபிசில் (Box Office Collection) மட்டும் செய்தது. படத்தில் தப்பு, சஞ்சய் மிஸ்ரா உட்பட பலரும் நடித்திருந்தனர். ஆக்சன் காட்சிகளுடன் படம் வெளியாகி வரவேற்பு பெற்றது.
09. து ஜூஹதி மெயின் மக்கர் (Tu Jhoothi Main Makkaar): ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர், ஹஸ்லீன் கவுர் உட்பட பலர் நடிப்பில், லவ் ரஞ்சன் இயக்கத்தில், ரூ.200 கோடி செலவில் தயாராகி, 8 மார்ச் 2023 அன்று வெளியாகி, ரூ.220 கோடி வசூல் செய்த திரைப்படம் து ஜூஹதி மெயின் மக்கர். காதல் - காமெடி காட்சிகளுடன் வெளியான திரைப்படம், ஹிந்தி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. College Girl Gang Raped: நண்பர்களின் சதித்திட்டம்.. 20 வயது மாணவி கத்தி முனையில் கூட்டுப்பாலியல் பலாத்காரம்: குமரியில் பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி.!
08. தி கேரளா ஸ்டோரி (The Kerala Story): சுதிப்தோ சென் இயக்கத்தில், ஆதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி உட்பட பலரின் நடிப்பில், 5 மே 2023 அன்று பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் திரை கேரளா ஸ்டோரி. இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.300 கோடியை கடந்து வசூல் செய்தது.
07. கடார் 2 (Gadar 2): சன்னி டோல், சிம்ரத் கவுர், அமீஷா படேல் உட்பட பலரின் நடிப்பில், அணில் சர்மா இயக்கத்தில், ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாராகி 11 ஆகஸ்ட் 2023 அன்று வெளியான திரைப்படம் கடார் 2. இப்படம் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்று, பாக்ஸ் ஆபிஸில் மட்டும் ரூ.600 கோடியை கடந்து வசூல் சாதனை செய்தது.
06. ஜெயிலர் (Jailer): நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உட்பட பலர் நடித்து 9 ஆகஸ்ட் 2023 அன்று திரையரங்கில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படம் ரூ.250 கோடி செலவில் தயாராகி, பாக்ஸ் ஆபிசில் ரூ.600 கோடியை கடந்து வசூல் செய்திருந்தது. படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கு சன் பிக்சர்ஸ் சார்பில் விலையுயர்ந்த கார் பரிசாகவும் வழங்கப்பட்டு இருந்தது.
05. ஓஎம்ஜி 2 (OMG 2): அமித் ராய் இயக்கத்தில், 11 ஆகஸ்ட் 2023 அன்று திரையரங்கில் வெளியாகிய திரைப்படம் ஓஎம்ஜி 2. இப்படத்தில் அக்ஷய் குமார், யமி கெளதம், பங்கஜ் திரிபாதி, ஆருஷ் வர்மா உட்பட பலர் நடித்திருந்தனர். ரூ.50 கோடி செலவில் தயாரான திரைப்படம், ரூ.220 கோடியை கடந்து வசூல் செய்திருந்தது. Play Store’s Best Apps and Games of 2023: 2023ல் கூகுள் பிளே ஸ்டோரில் சிறந்த செயலிகள் எவை?.. அசத்தல் தகவலை தெரிவித்த கூகுள்.!
04. லியோ (Leo): இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகிய திரைப்படம் லியோ. இப்படத்தில் நடிகர்கள் விஜய், திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன் உட்பட பலரும் நடித்திருந்தனர். படம் 19 அக். 2023 அன்று வெளியானது. ரூ.400 கோடி செலவில் தயாரான திரைப்படம், ரூ.610 கோடியை கடந்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்தது.
03. ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி (Rocky Aur Rani Kii Prem Kahaani): நடிகர்கள் ஆலியா பட், அஞ்சலி ஆனந்த், ரன்வீர் சிங் உட்பட பலரின் நடிப்பில், கரண் ஜோகர் இயக்கத்தில், ரூ.160 கோடி பட்ஜெட்டில் தயாராகி 28 ஜூலை 2023 அன்று வெளியான திரைப்படம் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி. காதல் வயப்பட்ட ஜோடிகள் குடும்ப பாசத்தை உணர்ந்து, அவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடத்தும் கதையை மையமாக கொண்ட படம் ரூ.355 கோடி வசூல் செய்திருந்தது.
இந்தியாவில் 2023ல் வெளியான திரைப்படங்களில், iMDB பட்டியலில் முதல் இரண்டு இடத்தையும் நடப்பு ஆண்டில் ஷாருக்கான் கைப்பற்றி இருக்கிறார். இதன் வாயிலாக அவர் மீண்டும் தன்னை பாலிவுட் திரையுலகின் கிங் கானாக நிலைநிறுத்தி, மாபெரும் சரித்திர சாதனை படைத்துள்ளார்.
02. பதான் (Pathaan): சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், நடிகர்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆப்ரஹாம் உட்பட பலர் நடித்து, 25 ஜனவரி 2023 அன்று வெளியான திரைப்படம் பதான். இந்திய உளவு அமைப்பான ரா அதிகாரிகளின் வீர சாகசங்கள் தொடர்பான கதையை மையப்படுத்தி வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் பதான், ரூ.225 கோடி செலவில் தயாராகி, பாக்ஸ் ஆபிசில் மட்டும் ரூ.1050 கோடியை கடந்து வசூல் செய்தது. இப்படம் ஹிந்தி மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளிலும் வெளியிடப்பட்டது.
01. ஜவான் (Jawan): அட்லீ இயக்கத்தில், நடிகர்கள் ஷாருக்கான், திரிஷா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, சஞ்சய் மல்கோத்ரா, பிரியாமணி உட்பட பலர் நடித்து, 7 செப் 2023 அன்று வெளியான திரைப்படம் ஜவான். பல அதிரடி திருப்புமுனை மற்றும் ஆக்சன் காட்சிகளுடன் வெளியான திரைப்படம் ரூ.300 கோடி செலவில் தயாராகி, ரூ.1100 கோடியை கடந்து வசூல் சாதனை செய்திருந்தது. இயக்குனர் என்ற முறையில் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட படத்திலேயே ஆயிரக்கணக்கான கோடிகளை தயாரிப்பு நிறுவனத்திற்கு வாரி வழங்க காரணமாக இருந்த அட்லீயும், ஷாருக்கானின் அட்டகாசமான நடிப்பும் படத்தின் வெற்றிக்கு முதல் காரணமாக அமைந்தது.
முன்னதாக iMDB சார்பில் வெளியிடப்பட்ட 2023-ன் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் (Most Popular Indian Stars of 2023) தொடர்பான பட்டியலில், நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் முதல் இடத்தை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் நயன்தாரா நான்காவது இடத்தையும், விஜய் சேதுபதி பத்தாவது இடத்தையும் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.