PM Modi Congratulates Pakistan's PM Shehbaz Sharif: பாகிஸ்தானில் 2-வது முறையாக பிரதமரான ஷெபாஷ் ஷெரீப்... பிரதமர் மோடி வாழ்த்து..!
பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பொறுப்பேற்றள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
மார்ச் 07, இஸ்லாமாபாத் (Islamabad): கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் (Pakistan) பிரதமராக இருந்த இம்ரான்கானின் ஆட்சியின் போது, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததை அடுத்து, அவர் பிரதமர் பதவியை இழந்தார். மேலும், ஊழல் முறைகேடு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் (Shehbaz Sharif) இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து 2 ஆண்டுகள் பதவி வகித்தார். Chandrayaan 4: இரட்டை பாய்ச்சலில் இஸ்ரோ.. ஒரே நேரத்தில் 2 ராக்கெட்களை விண்ணிற்கு அனுப்ப திட்டம்..!
பிரதமரான ஷெபாஷ் ஷெரீப்: இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் ஆனது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது. அதற்கான வாக்கெடுப்பு கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் உமர் அயூப் கான் 92 வாக்குகள் பெற்ற நிலையில், ஷெபாஷ் ஷெரீப் 201 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதையடுத்து இரண்டாவது முறையாக அவர் பாகிஸ்தான் பிரதமரானார். தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி 24-வது பிரதமராக பதவி ஏற்றார்.
பிரதமர் மோடி வாழ்த்து: இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் ‘‘பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு வாழ்த்துகள்’’ என குறிப்பிட்டுள்ளார்.
Congratulations to @CMShehbaz on being sworn in as the Prime Minister of Pakistan.
— Narendra Modi (@narendramodi) March 5, 2024
(The above story first appeared on LatestLY on Mar 07, 2024 12:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

