Chandrayaan 4 (Photo Credit: @ISROSpaceflight X)

மார்ச் 07, புதுடெல்லி (New Delhi): கடந்த 2023-ம் ஆண்டு இந்தியா விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் (ISRO) சந்திரயான் 3 (Chandrayaan 3) விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி சாதனை படைத்தது. இந்நிலையில் இந்தியா தனது அடுத்த கட்ட செயல்பாட்டை நிகழ்த்துவதற்காக சந்திரயான் 4 (Chandrayaan 4) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த சந்திரயான் 4 திட்டத்தின் படி நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்கி அங்கிருந்து சில சாம்பிள்களை எடுத்துக் கொண்டு மீண்டும் சந்திரயான் 4 விண்கலம் பூமிக்கு திரும்பும். ந்திரயான்-4 வெற்றி பெற்றால், சந்திரனின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை கொண்டு வரும் நான்காவது நாடாக இந்தியா உருமாறும். IND vs ENG 5th Test: தற்போதைய ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரரின் இடத்தை பிடித்த... முன்னாள் ஆர்சிபி நம்பிக்கை நட்சத்திர வீரர்..!

இந்த சந்திராயனின் முதல் பாகமான புரொபஷனல் ராக்கெட்டில் இருந்து விண்கலம் பிரிந்து சென்றவுடன் அது சந்திரனை நோக்கி பயணிக்க உதவும். அடுத்த கட்டமான டிசென்டர் நிலவில் தரை இறங்குவதற்காக உதவும். பின்னர்அதலிருந்து வெளியேறும் ரோவர் நிலவின் மேற்பரப்பில் உள்ள சில சாம்பிள்களை கலெக்ட் செய்து மீண்டும் மாடுல் உள்ளே வரும். அது பூமிக்கு அனுப்பி வைக்கப்படும்.