Cocoa Prices Reach All-Time High: "காய்கறி ரேட் எல்லாம் ஏறுது.. நாங்க என்ன தக்காளி தொக்கா.." என கிடுகிடுவென உயரும் சாக்லேட்டின் விலை..!
சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.
மார்ச் 28, புதுடெல்லி (New Delhi): அனைவரையும் கட்டிப்போட்டுள்ள ஓர் உணவு பண்டம் என்றால் அது சாக்லேட் (Chocolate) தான். இந்த சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருள் என்றால், அது கோகோ (Cocoa) தான். தற்போது அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் டன் ஒன்றுக்கு அதன் விலை $700-க்கும் அதிகமாக உயர்ந்து முதன்முறையாக $9,000-ஐத் தாண்டியுள்ளது. அதுவும் ஒரே ஆண்டில் சுமார் 150 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. Thalaivar 171: ரஜினியை செதுக்கிய கமல் ஃபேன் பாய்... தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்..!
உலகளவில் கோகோ உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கும் ஐவரி கோஸ்ட் மற்றும் கானாவில், மோசமான வானிலை மற்றும் பூச்சித் தாக்குதல் காரணமாக கோகோவின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் சாக்லேட் விலை உயரும். மேலும் சாக்லேட் ரகங்கள் மட்டுமின்றி கோகோ பவுடர் கொண்டு தயாரிக்கப்படும் இதர பொருட்களும் விலை உயர்வை சந்திக்கும். இந்த நிலைமை தொடர்ந்தால், ஒரு டன்னுக்கு 10,000 டாலர் என்றளவுக்கு கோகோ விலை எகிறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.