Cancer Vaccination: கேன்சர் மருந்து புதிய சரித்திர சாதனை: ரஷ்யாவின் தடுப்பூசி 100% செயல்படுவதாக அறிவிப்பு.!

மருத்துவ பரிசோதனைகளில் புற்றுநோய் தடுப்பூசி என்டோரோமிக்ஸ் 100% செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 07, மாஸ்கோ (World News): ரஷியாவில் உருவாக்கப்பட்ட mRNA புற்றுநோய் தடுப்பூசி Eneromix. இதன் சோதனையில் 100% செயல்பாடு எட்டப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பான புற்றுநோய் தடுப்பூசிக்கான அங்கீகாரத்துக்கு தயாரிப்பு நிறுவனம் காத்திருக்கிறது. மேலும், ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் இதுதொடர்பான விண்ணப்பத்தையும் அந்நிறுவனம் முன்வைத்துள்ளது. உலகளாவிய புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் புரட்சிகரமான வெற்றியாக எண்டோரோமிக்ஸ் தடுப்பூசி 100% செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ளது. Lunar Eclipse 2025: சந்திர கிரகணம் 2025: ஜோதிடம் சொல்வது என்ன? இதெல்லாம் முக்கியம்.! 

சோதனை முயற்சி வெற்றி:

மேலும், பெரிய புற்றுநோய் கட்டிகள் இந்த மருந்தால் குறிப்பிடத்தக்க வகையில் குறைத்துள்ளதாகவும் மருத்துவ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளன. புற்றுநோய் செல்களை கண்டு நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவித்து அழிப்பதையும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. விரைவில் அரசின் சார்பில் உரிய அறிவிப்புகள் கிடைக்கும் பட்சத்தில், அதனை நாடு முழுவதும் தன்னார்வலர்களுக்கு செலுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சிக்கு நல்ல வெற்றி கிடைத்தால், உலகளவில் புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டில் புதிய அத்தியாயம் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement