செப்டம்பர் 07, சென்னை (Chennai News): 2025 ஆம் ஆண்டுக்கான முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. கிரகணத்தின் போது நாம் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. ஜோதிட ரீதியாக ராகு கேதுவின் பாகை சூரிய சந்திரனில் இணையும் போது சூரிய கிரகணமும், சூரியன் சந்திரன் நேர்கோட்டில் பயணிக்கும் போது ராகு-கேதுவை தொடும்போது சந்திர கிரகணம் ஏற்படும். தமிழ் நாள்காட்டிபடி ஆவணி மாதம் 22ஆம் தேதி அதாவது செப்டம்பர் 7, 2025 அன்று சதயம் நட்சத்திரத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. Chandra Grahan 2025: செப் 7-ல் நிகழும் சந்திர கிரகணம்.. இந்த 5 ராசிக்காரர்கள் கவனமா இருங்க.!
கிரகணம் கவனிக்க வேண்டியது:
இரவு 09:57 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் 11:43ல் மத்தியமாக கருதப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, அதிகாலை 01:00 மணியளவில் சந்திரகிரகணம் நிறைவடைகிறது. சந்திரன் தனது பாவத்தால் ராகு தோஷத்தில் ஆட்பட்டார். இதனால் ராகு என்று அழைக்கப்படும் பாம்பு அவரை முடக்க நினைத்தார். ஆனால், சந்திரன் இறைவனை வேண்டி மந்திரங்கள் சொல்லி வேண்டியதால், இறைவன் சந்திரனுக்கு அருள் தந்ததாகவும், இதனால் ராகு தோஷம் நீங்கியதாகவும் புராணங்கள் சொல்கின்றன. கிரகணத்தின் போது இறைவனை பிரார்த்திக்க அவரவர் செய்த பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. கிரகணம் ஏற்படும் காலம் இயற்கை நிகழ்வாக கருதப்படும் நிலையில், கர்ப்பிணிகள் வெளியே வரக்கூடாது என்றும், சந்திரனின் கதிர்வீச்சால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படலாம் என்று புராணங்கள் சொல்கின்றன. Chandra Grahan 2025: பௌர்ணமியில் சந்திர கிரகணம்.. கிரிவலம் செல்லலாமா?.. பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!
இதெல்லாம் செய்யுங்க:
கிரகணத்தின் போது இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக எந்த விதமான உணவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. கோவில்களில் நடை சாற்றப்பட்டு இருக்கும். கிரகணத்துக்கு முன்பே உணவை சமைத்து சாப்பிட்டு இருப்பது நல்லது. நவகிரக துதியை பாடலாம். பாராயணம் செய்யலாம். கிரகணம் முழுவதும் முடிந்த பின்னர் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்று வரலாம். பெற்றோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கிரகணம் முடிந்ததும் ஏற்பாடுகள் செய்யலாம். கோவில் தரிசனத்திற்கு பின் உணவு எடுத்துக் கொள்ளலாம். சந்திர கிரகண காலகட்டத்தில் வீட்டில் இருப்போம் இறைவனை நினைத்து வழிபாடு செய்யலாம்.