Heatwave (Photo Credit: pixabay)

ஏப்ரல் 25, மணிலா (World News): தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வறண்ட வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே கடுமையான வெயில் தாக்கம் நிலவி வருகிறது. Chess Grandmaster Gukesh Dommaraju Received a Warm Welcome: வெற்றியுடன் தாயகம் திரும்பிய க்ரண்ட்மாஸ்டர் குகேஷ்: சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!

இதனையடுத்து, அந்நாட்டில் உள்ள பல்வேறு மாகாணங்களில் இயல்பு நிலையைவிட அதிகமான அளவில் வெயில் சுட்டெரிக்கிறது. சில மாகாணங்களில் 110 டிகிரி செல்சியஸ் (110 Degree Celsius) வரை வெயில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, மத்திய பிலிப்பைன்ஸ் மற்றும் சோசிச்கசர்கென் மாகாணத்தில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது.

இதன்காரணமாக அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்த வருடம் கொளுத்தும் வெயிலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.