Chess grandmaster Gukesh Dommaraju (Photo Credit: @PTI_India X)

ஏப்ரல் 25, சென்னை (Sports News): உலகளாவிய செஸ் சாம்பியனுடன் விளையாடும் வீரருக்கான தேர்வு செய்யும் செஸ் கேண்டிடேட் போட்டி, கனடாவில் உள்ள டொரன்டோ (Toranto) நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் இறுதிச்சுற்றின்போது அமெரிக்காவைச் சார்ந்த நகமுராவை எதிர்கொண்ட இந்திய வீரர் குகேஷ் (Chess Grandmaster Gukesh Dommaraju), 9 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார். இதன் வாயிலாக உலக சாம்பியன்ஷிப் (World Chess Championship) தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற பட்டத்தையும் இவர் எட்டிப் பிடித்தார். தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட குகேஷ் மற்றும் மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சார்ந்த வைஷாலி ஆகியோர் முன்னணியில் இருக்கின்றனர். இவர்களில் வைஷாலி புள்ளிப்பட்டியலின்படி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். New JioCinema Subscription Plan: அப்படிப்போடு.. ஜியோ சினிமா செயலியின் சேவைக்கட்டணம் அதிரடி குறைப்பு; அமேசான், நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு பேரிடி.! 

உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் குகேஷ்: செஸ் கேண்டிடேட் தொடரில் வெற்றிபெற்ற குகேஷுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், மகேந்திரா குழுமத்தின் நிறுவனர் ஆனந்த் மகேந்திரா உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், வெற்றியுடன் தாயகம் திரும்பிய செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தொம்மராஜூவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கனடாவில் நடைபெற்ற போட்டியை தொடர்ந்து, அடுத்தபடியாக உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதற்கு குகேஷ் நடப்பு சாம்பியனான சீனா நாட்டைச் சார்ந்த டிங் லிரெனுடன் மோத இருக்கிறார். Alcohol & E Cigarette Habits on Children: புகை, இ-சிகிரெட் பழக்கத்தால் சீரழியும் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள்; உலக சுகாதார அமைப்பு ஆய்வில் அதிர்ச்சி தகவல்.! 

12 வயதிலேயே மாபெரும் சாதனை: தனது 17 வயதிலேயே செஸ் சாம்பியன்ஸ் கேண்டிடேட் போட்டியில் வெற்றி பெற்ற குகேஷ், கடந்த 1984 ஆம் ஆண்டு 22 வயதில் ரஷிய நாட்டின் சார்பில் செஸ் போட்டியில் கலந்து கொண்ட காஸ்பரோவின் சாதனையை முறியடித்து இருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து முறை உலக சாம்பியன் என்ற பெருமையை பெற்றிருந்த ஆனந்துக்கு பின், உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொள்ளும் இரண்டாவது இந்தியராகவும் குகேஷ் கவனிக்கப்படுகிறார். சென்னையை பூர்வீகமாக கொண்ட குகேஷ் தனது 12 வயதில் இந்தியாவின் முதல் மற்றும் உலக அளவில் மூன்றாவது கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்றார்.