
மே 15, ஜலிஸ்கோ (World News): மெக்சிகோவில் ஜலிஸ்கோ (Jalisco) மாகாணத்தில் உள்ள ஜபோபான் எனும் பகுதியை சேர்ந்தவர் வலேரியா மார்க்வெஸ் (வயது 23). இவர், பியூட்டி சலூனில் பணியாற்றி வந்தார். டிக் டாக் (TikTok) மற்றும் இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் பாலோவர்ஸ்களுடன், சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவராக இருந்துள்ளார். தான் செய்யும் மேக்கப் குறித்த வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டும் வந்துள்ளார். அவ்வப்போது, நேரலையில் தனது பாலோயர்களுடனும் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். Israel Airstrikes on Gaza: தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்.. காசாவில் குழந்தைகள் உட்பட 65 பேர் பலி..!
மாடல் அழகி சுட்டுக்கொலை:
இந்நிலையில், வலேரியா மார்க்வெஸ் டிக்டாக் நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர், வலேரியாவை துப்பாக்கியால் (Shot Dead) சுட்டுக்கொன்றுள்ளார். இது டிக் டாக் நேரலையில் அப்படியே ஒளிபரப்பானது. இதனைக் கண்ட அவரது பாலோவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, அவரது செல்போனை எடுத்த நபர், தனது முகத்தை நேரலையில் காட்டியுள்ளார்.
போலீஸ் விசாரணை:
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த மர்ம நபர் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பாலின வன்முறை காரணமாக இந்தக் கொலை சம்பவம் அரங்கேற்றி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். லத்தீன் அமெரிக்கா நாடுகளில் பெண்கள் மீது பாலினத்தின் அடிப்படையில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. மெக்சிகோவில் உள்ள 32 மாகாணங்களில் அதிக கொலைகள் நடக்கும் மாநிலங்களில் ஜலிஸ்கோ 6வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ இதோ:
#Mexican social media beauty influencer shot to death during a #TikTok live stream by an assailant who entered the premises under the guise of delivering a #gift#femicide #politics #cdnpoli #writingcommunity pic.twitter.com/nIIy1Gl5LU
— torontowriter (@TorontoWriter) May 15, 2025