Israeli Airstrikes on Gaza (Photo Credit: @Wotan_01 X)

மே 14, ஜெருசலேம் (World News): இஸ்ரேல் - ஹமாஸ் (Israel-Hamas War) அமைப்பினரிடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், 'போரை நிறுத்தும் சூழ்நிலை இருக்காது. ஒரு தற்காலிக போர் நிறுத்தம் நடக்கலாம். ஆனால், வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். India Vs Pakistan Conflict: இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக ட்ரம்ப் கருத்து.. இந்தியா அதிகாரப்பூர்வ மறுப்பு.!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்:

இந்நிலையில், காசாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 22 குழந்தைகள் உட்பட 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருப்பதால், பெரும் பதற்றம் அதிகரித்துள்ளது.