Gold Mine Fire Accident: தங்க சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து; 27 தொழிலாளர்கள் உடல் கருகி பலி., கண்ணீரில் உறவினர்கள்.!
175 தொழிலாளர்கள் பணியாற்றி வந்த சுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு 27 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியான சோகம் நடந்துள்ளது.
மே 08 , லிமா (World News): பெரு (Peru) நாட்டில் உள்ள தெற்கு பகுதியில் அமைந்துள்ள Arequipa நகருக்கு அருகே, Yanaquihua என்ற கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தங்க சுரங்கம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவில் 175க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் வழக்கம்போல தங்களின் பணிகளை கவனித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று சுரங்கத்தில் நள்ளிரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவருகிறது. இந்த தீ விபத்தில் சிக்கி 27 தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். Lal Salaam Rajinikanth: “மொய்தீன்பாய் ஆட்டம் ஆரம்பம்” லால் ஸலாம் படத்தில் ரஜினியின் அசத்தல் லுக் வெளியீடு.. கொண்டாடும் ரசிகர்கள்.!
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களும் தங்களின் சொந்த வாகனங்களில் தங்க சுரங்கம் நோக்கி கண்ணீருடன் படையெடுத்து வந்தனர். மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.
(The above story first appeared on LatestLY on May 08, 2023 09:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

