Sri Lanka Presidential Election 2024: இலங்கையில் அதிபர் தேர்தல்.. எப்போது நடைபெற உள்ளது?.!
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மே 10, கொழும்பு (World News): கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று, கோத்தபய ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். இந்த நிலையில், அவரின் பதவிக்காலம் இந்தாண்டு முடிவடைகிறது. இதனையொட்டி அதிபர் தேர்தலுக்கான (Sri Lanka Presidential Election) தேதியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. World Lupus Day 2024: உலக லூபஸ் தினம்.. லூபஸ் நோய் என்றால் என்ன.? அதிலிருந்து மீள்வது எப்படி?.!
அதன்படி 2024-ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 இடங்கள் உள்ளன. அதில் 196 பேர் தேர்தல் மூலமாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.
(The above story first appeared on LatestLY on May 10, 2024 11:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

