Lupus (Photo Credit: Wikipedia)

மே 10, சென்னை (Chennai): லூபஸ் (Lupus) என்று சொல்லப்படும் எஸ்எல்ஈ (சிஸ்டமிக் லூபஸ் எரிதமடோசஸ்), நம் உடலின் தலை முதல் கால் வரை எந்த உறுப்பை வேண்டுமானாலும் பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த நோயில், நம் உடலின் எதிர்ப்பு சக்தியே நம் திசுக்களை சேதப்படுத்தி, வீக்கம், உடல் உறுப்பு சேதம், உயிர் ஆபத்து போன்ற பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்திவிடும். இதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் சொல்லவே, உலக லூபஸ் தினம் (World Lupus Day) ஒவ்வொரு ஆண்டும் மே 10 அன்று அனுசரிக்கப்படுகிறது.

அறிகுறிகள்: சோர்வு, மூட்டு வலி, சொறி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் அவ்வப்போது மோசமடையக்கூடும். லூபஸ் மூட்டுகள், தோல், இரத்த அணுக்கள், சிறுநீரகம், மூளை, இதயம் மற்றும் நுரையீரலையும் பாதிக்கலாம். இது ஆண்களை விட பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. மேலும் மகப்பேற்றுக்கு பிறகான பெண்களுக்கு இந்நோய்க்கான ஆபத்துகள் இன்னும் அதிகம். TN SSLC Results 2024: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: தேர்ச்சி விகிதம், எந்த மாவட்டம் முதலிடம்?.. முழு விபரம் இதோ.!

சிகிச்சை முறைகள்: லூபஸ் என்பது முற்றிலுமாக குணப்படுத்தகூடிய நோய் கிடையாது. ஒருவர் லூபஸ் நோயினால் பாதிக்கப்பட்டு திரும்பினாலும், மீண்டும் அது பாதிக்காமல் இருக்க,கால்சியம் அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளுதல், யோகா மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடல் மற்றும் மனதை ஆரோக்கியமாக வைத்திருத்தல், சூரிய ஒளி அதிகம் படாத வண்ணம் பார்த்துக் கொள்ளுதல், போதிய கால இடைவெளியில் பரிசோதனை மேற்கொள்ளுதல் போன்றவைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.