Minor Girl Raped by Teacher: 16 வயது சிறுமிக்கு எய்ட்ஸ்; 29 வயது ஆசிரியரின் அதிர்ச்சி செயலால் பரிதவிக்கும் குடும்பம்.. நெஞ்சை பதறவைக்கும் விபரம் உள்ளே.!
Me Too AIDS (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 06, பேங்காக் (Bangkok): அமெரிக்காவை சேர்ந்த டிக் டாக் பிரபலம் மற்றும் ஆசிரியர் லூக் ராக்வெல் (Luke Rockwell). 29 வயதுடைய ஆசிரியரான அவர், தாய்லாந்து நாட்டில் இருந்து ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருவதாக தெரியவருகிறது.

இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ஆசிரியர் என்பதால் சிறுமியின் பெற்றோரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனை தனக்கான வாய்ப்பாக கருதிய லூக், சிறுமியை பலாத்காரம் (in Thailand American Teacher Luke Rockwell Rapes 16 Year Old Minor Girl) செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதமாகவே சிறுமியின் உடல்நலம் கேள்விக்குறியான நிலையில், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தபோது எய்ட்ஸ் (AIDS) நோய் இருப்பது உறுதியானது. இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர், மேற்படி பரிசோதனை செய்துள்ளனர்.

அந்த பரிசோதனையில் சிறுமிக்கு எய்ட்ஸ் உடலுறவு வாயிலாக பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, சிறுமியிடம் அவர்கள் விசாரித்தபோது சிறுமியின் ஆங்கில ஆசிரியர் லூக்-கின் அதிர்ச்சி செயல் அம்பலமானது. Fire Accident in Thoraipakkam: சென்னை டெக் பார்க்கில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்த ஊழியர்கள்.! 

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, ஆசிரியருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகளால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட அவர், சொந்த ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த மார்ச் மாதம் சிறுமியுடன் பழக்கத்தை ஏற்படுத்திய ஆசிரியர், அப்போதே பலாத்காரமும் செய்துள்ளார். லூக்கும் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிறுமியுடன் உறவு கொண்டதால், சிறுமிக்கும் அந்நோய் பரவி இருக்கிறது.

இதில் உச்சகட்ட ஆதாரம் என்னவென்றால், தான் சிறுமியுடன் உடலுறவு கொள்வதை ஆசிரியர் வீடியோ எடுத்தும் வைத்துள்ளார். அது முக்கிய ஆதாரமாக அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் பெண் ஆசிரியைகள் சிறுவர்களுடன் உடலுறவு கொண்ட செய்திகள் வெளியாகி பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆசிரியர், சிறுமியுடன் உடலுறவுகொண்டு எய்ட்ஸ் நோய் பாதிப்பை அவருக்கும் ஏற்படுத்திய சம்பவம் அதிர்வலையை பதிவு செய்கிறது.