செப்டம்பர் 5, சென்னை (Tamilnadu News): சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில், துரைப்பாக்கத்திற்கு அடுத்துள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் டெக் பார்க் (Tech Park) ஒன்று இயங்கி வருகிறது. அதில் பத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அங்கே ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கான கேண்டீன் வசதி, மேல் மாடியில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், இன்று கேண்டீனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஊழியர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். மேலும், மளமளவென தீ பரவியதால் கட்டிடத்தின் மேற்பகுதி கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. World Largest Crocodile: 1000 கிலோ எடைகொண்ட, 7 மீட்டர் அளவிலான உலகிலேயே மிகப்பெரிய முதலை; அசத்தல் வீடியோ இதோ.!
இதை அடுத்து, வேளச்சேரி, மேடவாக்கம் மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் இருக்கும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்தனர். உள்ளே ஊழியர்கள் யாராவது சிக்கி இருக்கிறார்களா? என்று அவர்கள் தேடினர். ஊழியர்கள் யாரும் உள்ளே இல்லாததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒன்பது மாடி கட்டிடத்தில், ஏற்பட்ட தீ விபத்தை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நின்று பார்த்துக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.