Time Traveler Predicts: 2023ல் வரலாறாகப்போகும் 750 அடி மெகா சுனாமி.. Time Traveler கூறிய அதிர்ச்சி உண்மை.. ஏலியன்களும் வருகிறது.!

ஏலியன்கள் குறித்து பல கணிப்புகளும் இருக்கின்றன.

Template: Time Traveling Machine

டிசம்பர், 11: சமூக வலைத்தளத்தில் எப்போதும் ட்ரெண்டிங்கான (Social Media's Trending) விஷயம் என்பது இருந்துகொண்டே இருக்கும். அதில் காலம் காலமாக மறக்க முடியாதது என்றால் ஏலியன்கள் & பிற பிரபஞ்சங்கள் (Aliens & Other Planets) தொடர்பான முடிவில்லா கேள்விகள் தான். இந்த விஷயம் தொடர்பாக இணையத்தில் தேடினால் கடலைப்போல ஆழமாக பல விடைகள் உறுதிப்படுத்தப்படாமல் கிடைக்கும். ஏலியன்கள் குறித்து பல கணிப்புகளும் இருக்கின்றன.

இந்த நிலையில், 2022ம் ஆண்டு முடியவுள்ளது. விரைவில் நாம் 2023ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். 2022 எப்படி தொடங்கி எப்படி முடிந்தது என பலருக்கும் புரியவில்லை. பலரின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்கள் நடந்துவிட்டன. விட்டுப்போன சொந்தம் கிடைத்தது, நண்பர்களுடன் சந்திப்பு, திடீர் திருமணம், காதல் மற்றும் காதல் முறிவுகள் போன்றவை என சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், உலகளவில் நடக்கும் விஷயங்கள் குறித்த கணிப்புகள் பலரையும் பதைபதைக்க வைக்கும். அந்த வகையில், இவாங்காவின் பல கூற்றுகள் உறுதிபட நடந்துள்ளது என அடுத்தடுத்த நிகழ்வுகள் அதனை உறுதி செய்கின்றன. இது ஒருபுறமிருக்க, டிக் டாக்கர் (Tic Tok) ஒருவர் தன்னை 2671ல் இருந்து வந்ததாக கூறி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளார். Junk Foods: அச்சச்சோ.. உங்களின் குழந்தை அதிகளவு ஜங்க் புட் சாப்பிடுகிறீர்களா?.. அதிகரிக்கும் மறதி நோய்; எச்சரிக்கை உங்களுக்குத்தான்..! 

Mega Tsunami

அதாவது, எதிர்காலத்தில் இருந்து வருகை தந்துள்ளதாக கூறும் டிக் டாக்கர் ஈனோ அலாரிக் (Eno Alaric), உலகம் 2023ல் பெரும் பிரச்சனைகளை சந்திக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தன்னை டைம் டிராவளர் (Time Traveler) என்றும் அறிமுகம் செய்துகொள்கிறார்.

அதாவது, டிசம்பர் மாதம் 8ம் தேதி 2022ல் பூமிக்கு வேற்றுகிரக வாசிகள் விண்கல் மூலமாக வந்து சேருவார்கள். அவர்கள் பூமியில் இருப்பதை அடுத்த 6 மாதங்களில் மக்கள் அறிந்துகொள்வார்கள். வேற்றுகிரக வாசிகள் பூமிக்கு வருவதன் முதற்கட்ட நிகழ்வு நவம்பர் 30, 2022ல் நடக்கும்.

அன்றைய நாளில் ஜேம்ஸ் வெப் டெலஸ்க்கோப் புதிய கிரகத்தை கண்டுபிடிக்கும். அது ஏலியன்களுடன் தொடர்பு கொள்வதற்கு முதற்கட்ட படி என்றும் கூறலாம். பிப்ரவரி 6, 2023ல் 4 இளைஞர்கள் சேர்ந்து விண்மீன் கோள்களுக்கு உள்ள பழங்காலத்து திறவுகோலை கண்டறிவார்கள்.

மார்ச் மாதத்தின் போது மரியானா அகழிகளில் பழங்காலத்தில் வாழ்ந்த இனத்தின் தடயங்கள் கண்டறியப்படும். அதேபோல, அமெரிக்காவில் இருக்கும் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் 750 அடி (228.6 மீ) மெகா சுனாமி ஏற்படும். அப்பகுதியில் இருக்கும் மக்கள் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 12:34 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).