Online Order Delivery (Photo Credit: Pixabay)

டிசம்பர் 05, லஞ்சஷிரே (Lancashire): ஐரோப்பாவில் உள்ள லஞ்சஷிரே பகுதியைச் சார்ந்தவர் பில் ஸ்மித் (வயது 59). இவர் அந்நகரின் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் வேலை தொடர்பாக வெளியூர் சென்றுள்ளார்.

ஆர்டர் செய்யப்பட்ட பொருட்கள்: பின்னர், மீண்டும் சில மாதங்கள் கழித்து, தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தன்னிடம் வீட்டில் இருந்த மளிகை பொருட்கள் அனைத்தும் காலாவதியாகிவிட, ரூபாய் 15,000 மதிப்பில் பிரிட்டிஷ் சூப்பர் மார்க்கெட்டில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

ஒரு பார்சலில் துர்நாற்றம்: ஆர்டர் செய்யப்பட்ட மளிகைப்பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து, தனது வீட்டில் உள்ள சமையல் அறையில், அதனை அடுக்கும் பணியில் ஸ்மித் ஈடுபட்டிருந்தார். அச்சமயம் ஒரு பார்சலில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. GTA 6 Trailer: ஜிடிஏ ரசிகப்பெருமக்களுக்கு உற்சாக செய்தி: வெளியானது ஜிடிஏ 6 ட்ரைலர்... விரைவில் கேம் வெளியீடு.! 

அதிர்ச்சிமேல் அதிர்ச்சி: அதனை வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து சோதனை செய்தபோது, மளிகை பொருட்களுடன் டெலிவரி செய்யப்பட்டது மனித கழிவுகள் என்பது அம்பலமானது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர், உடனடியாக டெலிவரி செய்த நபருக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவே, அவர் பார்சல் அனுப்பும் நிறுவனத்தை கூறியிருக்கிறார்.

விசாரணையில் களமிறங்கிய அதிகாரிகள்: சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்திடம் புகார் அளித்த ஸ்மித், அதுசார்ந்த அரசுத்துறை அதிகாரிகளுக்கும் மேற்படி விபரத்தை கொண்டு சேர்த்துள்ளார். அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.