டிசம்பர் 05, நியூயார்க் (New York): சர்வதேச அளவில் கேமிங்-கில் பிரபலமான விளையாட்டாக இருப்பது ஜிடிஏ என்ற Grand Theft Auto (GTA). 90 கிட்ஸில் தொடங்கி GTA விளையாடாத நபர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு அதற்கு ரசிகர்கள் ஏராளம். ஜிடிஏ வைஸ் சிட்டி கேமுக்காக கம்பியூட்டர் கேமிங் சென்டர்களில், மணிநேரத்திற்கு ரூ.5 கொடுத்து சிறுவயதில் பலரும் ஜிடிஏ விளையாடி மகிழ்ந்து இருப்போம்.
90 கிட்ஸ்-களின் வரவேற்பு: தற்போது வரையில் ஜிடிஏ கேமில் 5 பாகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பாகமும் அட்டகாசமாக, தனித்தன்மையுடன் இருக்கும். அவற்றுக்கென ரகசிய குறியீடுகளை பயன்படுத்தி பலரும் தங்களின் பலமணிநேரத்தை இன்பமாக செலவழித்து இருந்தார்கள். Chennai Rain Flood: இயல்பு நிலைக்கு திரும்பத்தொடங்கும் சென்னை: சீரமைப்பு பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம்..!
காத்திருப்பு: நாம் பெரும்பாலும் ஜிடிஏ முதல் பாகத்தில் தொடங்கி 3 & 4 வரை விளையாடி இருப்போம். கடந்த 2013ல் ஜிடிஏ 5 வெளியானது. தற்போது வரை ஜிடிஏ 6 வரவில்லை. விரைவில் ஜிடிஏ கேமை தயாரித்து வழங்கும் ராக்ஸ்டார் நிறுவனம், சந்தைகளில் தனது 6வது பாதிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜிடிஏ 6 ட்ரைலர்: இந்நிலையில், இன்று ஜிடிஏ வைஸ் சிட்டி கேமின் ஆறாவது பாகத்திற்கான டிரைலரை வெளியிட்டு இருக்கிறது. அந்த வீடியோ வைரலாகி, ஜிடிஏ கேம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 2025ல் ஜிடிஏ 6ம் பாகம் வெளியாகும்.