US Shocker: அதிநவீன துப்பாக்கியை கொண்டு அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிசூடு; 22 பேர் பலி., 60 பேர் படுகாயம்.. அமெரிக்காவில் பயங்கரம்.!

இனவெறி, துப்பாக்கி கலாச்சாரம், போதைப்பொருள் கடத்தல் கும்பலின் சட்டவிரோத செயல்கள் உட்பட பல காரணத்தால் அமெரிக்காவில் அவ்வப்போது அப்பாவி மக்களின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்படுகின்றன.

US Mass Shot 26-Oct-2023 | Accuse Visual (Photo Credit: @BNO News X)

அக்டோபர் 26, லூயிஸ்டன் (World News): அமெரிக்காவில் உள்ள மைனே மாகாணம், ஆண்ட்ரோஸ்கோகின் (Maine State, Androscoggin County) கவுண்டியில் முக்கிய நகரமாக இருப்பது லூயிஸ்டன் (Lewiston). இங்குள்ள மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில், சம்பந்தப்பட்ட மர்ம நபர் கையில் பெரிய துப்பாக்கியுடன், கண்ணில் படும் மக்களையெல்லாம் சுட்டு கொலை செய்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 08:30 மணிக்கு மேல் துப்பாக்கிசூடு சம்பவம் தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து 3 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. Madurai Shocker: கஞ்சா குடிக்கிகளின் போதை வெறியால் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட அப்பாவி; ஒரு(தறு)தலைக்காதல் விபரீதத்தால் சோகம்.! 

இந்த தாக்குதலின் காரணமாக தற்போது வரை 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிசூடு நடத்திய நபரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவரை யாரேனும் கண்டால் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்குமாறும் அம்மாகாண காவல்துறை தெரிவித்து இருக்கிறது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement